மோகன் சி. லாசரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மோகன் சி. லாசரஸ்[தொகு]

சகோ. மோகன் சி. லாசரஸ் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலுமாவடி என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். முன்னதாக அவர் இந்து மத்த்தின் பாரம்பரியத்திலும், நம்பிக்கையிலும் வளர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் இயேசுவை ஒரு மத்த்தின் தலைவராக மட்டும் அறிந்திருந்தார். அவரது 14வது வயதில் நோய்வாய்ப்பட்டு இருதயம் வீங்கி, முழு சரீரமும் செயலிழந்து கஷ்டப்பட்டார். அவரது குடும்பத்தினரும, நண்பர்களும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோது தனது தாயார் கேட்டுக்கொண்டதின் நிமித்தம் திரு. சாமுவேல் என்ற குடும்ப நண்பர் ஜெபித்தபோது, ஒரு தெய்வீக வல்லமை அவரைத் தொட்டது. அவர் இயேசுவின் வல்லமையினால் பரிபூரண சுகம்பெற்று தன் படுக்கையை விட்டு எழுந்திருந்தார். பின்னர் தனது வாழ் நாட்களை கர்த்தரின் பணிக்காக அர்ப்பணித்தார். தனது இறையியல் படிப்பை, சென்னையிலுள்ள இந்துஸ்தான் வேதாகமக கல்லூரியில் பயின்றபின், தனது சொந்த உரான நாலுமாவடியில் ஊழியத்தை துவக்கினார். இதன் மூலம் “இயேசு விடுவிக்கிறார் ஊழியம்” 1978 ஆம் ஆண்டு நாலுமாவடியில் ஆரப்பிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும், உலகமெங்குமுள்ள விசுவாசிகளை ஜெபிக்க தூண்டுவதே இவ்வூழியத்தின் பிரதான தரிசனம் ஆகும். இயேசு விடுவிக்கிறார் ஊழியமானது 25 விதமான ஊழியங்களை, 240 விசுவாச ஊழியர்களைக் கொண்டு தேவ இராஜிய திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. அவர் தனது மனைவி ஜாய்ஸ் லாசரஸீடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.

மேற்கோள்[தொகு]

  1. இயேசுவோடு 25 ஆண்டுகள்
  2. ஜெபத்தின் வல்லமையும் இரகசியங்களும்

வெளிபுற இணைப்புகள்[தொகு]

  1. http://www.geolysis.com/place-info.php?p=542015718&k=480447352
  2. Redeems, Jesus. "Mohan C. Lazarus". Jesus Redeems. Retrieved 14 January 2014.
  3. http://www.jesusredeems.com/Meeting_Schedule.asp
  4. https://en.wikipedia.org/wiki/Nalumavadi
  5. http://www.jesusredeems.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_சி._லாசரஸ்&oldid=2376878" இருந்து மீள்விக்கப்பட்டது