மொஸ்தபா சர்வார் பரூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொஸ்தோபா சர்வார் ஃபாரூக்கி (Mostofa Sarwar Farooki) ஒரு வங்காளதேசத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.[1] இவரது படங்கள் தேர்ட் பெர்சன் சிங்குலர் நம்பர் , டெலிவிசன், நோ பெட் ஆஃப் ரோஸஸ் ஆகியவை உலகம் முழுவதும் விமர்சன ரீதியாக நேர்மறையான பாராட்டினைப் பெற்றன. மற்றும் ஏராளமான சர்வதேச மற்றும் தேசிய விருதுகளைப் அந்தத் திரைப்படங்கள் பெற்றது. திரைப்பட தயாரிப்பாளர்களின் இயக்கத்தை "சேபியல்" என்ற பெயரில் நிறுவினார்.  

தொழில்[தொகு]

ஃபாரூக்கி 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் காட்சி அமைப்பு மற்றும் இயக்கத்தில் ஓர் புதிய போக்கை ஏற்படுத்தினார். இவரது முதல் படம் 2003 ஆம் ஆண்டில் வெளியான பேச்சுலர் ஆகும். இந்தத் திரைப்படத்தில் ஹுமாயூன் , ஃபரிடி, ஆபி கரீம், பெர்டஸ் அகமது மற்றும் சப்னூர் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். அவரது இரண்டாவது படம், ஜாகித் ஹசன், தாரிக் அனாம் கான், ஷாஹிடுஸ்மான் செலிம் மற்றும் பலர் நடித்த அரசியல் நையாண்டித் திரைப்படமான மேட் இன் பங்களாதேஷ் 2007 ஆம் ஆண்டில் வெளியானது. அவரது மூன்றாவது படம் தெ பெர்சன் சிங்குலர் நம்பர் நுஸ்ரத் இம்ரோஸ் திஷா, டோபு, மோஷரஃப் கரீம் ஆகியோரின் நடிப்பில் வெளியானது. மேலும் இந்தத் திரைப்படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் 2009 ஆம் ஆண்டில் திரையிடப்பட்டது . மேலும் இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வ போட்டியான 2009 மத்திய கிழக்கு சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. அதன் பிறகு ஓகே கட் என்ற குறும்படத்தை தயாரித்தார் . அவரது நான்காவது திரைப்படம் 2012 ஆம் ஆண்டில் வெளியான டெலிவிசன் ஆகும். இதில் சஞ்சல் சவுத்ரி, நுஸ்ரத் இம்ரோஸ் திஷா, மோஷரஃப் கரீம் மற்றும் காசி ஷாஹிர் ஹுதா ரூமி ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இறுதித் திரைப்படம் மற்றும் 2013 ஆம் ஆண்டில் APSA வின் நடுவர் பிரிவில் பரிசை வென்றது. மேலும் துபாய், ஜோக்ஜா-நெட்பாக் ஆசிய திரைப்பட விழா, ரோமின் ஆசியட்டிகா திரைப்பட மீடியா, மற்றும் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட ஐந்து சர்வதேச விருதுகளைப் பெற்றது. ஷீனா சோஹன் மற்றும் நூர் இம்ரான் மிது நடித்த அவரது ஐந்தாவது திரைப்படமான ஆண்ட் ஸ்டோரி கோல்டன் கோப்லெட் விருதுகள் மற்றும் துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் முஹ்ர் ஆசியா-ஆப்பிரிக்கா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் இது APSA மற்றும் சிங்கப்பூர் மற்றும் கேரள சர்வதேச திரைப்பட விழாக்களிலும் போட்டிப் பிரிவில் இருந்தது. இவர் தனது ஆறாவது திரைப்படமான டூப்: நோ பெட் ஆஃப் ரோஸஸை திரைப்படத்தில் சர்வதேச நடிகரான இர்பான் கான், நுஸ்ரத் இம்ரோஸ் திஷா, பர்னோ மித்ரா, ரோகேயா பிராச்சி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இது பிலிம் பஜார் இந்தியா 2013 இன் திட்டமாகும். இது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் துபாய் திரைப்பட சந்தை விருதையும், நடுவர்கள் பிரிவில் பரிசையும் வென்றது .[3] டாக்கா பயங்கரவாதத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இவரின் கனவுத் திரைப்படமான சாட்டர்டே ஆஃப்டர்னூன் திரைப்படத்தில் நுஸ்ரத் இம்ரோஸ் திஷா , பரம்பிரதா சாட்டர்ஜி, ஜாஹித் ஹசன், ஐயாட் ஹூரானி, மாமுனூர் ரஷீத் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 41 வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் முக்கிய போட்டி பிரிவில் இடம் பெற்றது.மேலும் ரஷ்ய திரைப்பட விமர்சகர்களின் கூட்டமைப்பு நடுவர் பரிசு மற்றும் கிராண்ட் நடுவர்களின் பரிசை வென்றது.

குறிப்புகள்[தொகு]