முவ்வா
முவ்வா | |
|---|---|
![]() முவ்வா கோபாலன் கோயில் | |
![]() Dynamic map | |
| ஆள்கூறுகள்: 16°13′30″N 80°54′54″E / 16.225°N 80.915°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | Krishna |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 15.46 km2 (5.97 sq mi) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 5,653 |
| • அடர்த்தி | 583/km2 (1,510/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அகுஎ | 521135 |
| தொலைபேசி இணைப்பு எண் | 08671 |
| வாகனப் பதிவு | ஏபி |
முவ்வா (Movva) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது மச்சிலிப்பட்டணம் வட்டத்தில் முவ்வா மண்டலத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருக்கும், மண்டலத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும்.[2][3] இக் கிராமமானது 17 ஆம் நுற்றாண்டில் புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர் சேத்ரையாவின் (1600-1680) சொந்த கிராமமாகும். உண்மையில், சேத்ரையா தனது சொந்த கிராமத்துடனும், இங்குள்ள பிரதான கோவிலின் கிருஷ்ணர் தெய்வத்துடனும் மிகுந்த பற்று கொண்டிருந்ததால், அவர் எழுதிய ஒவ்வொரு இசையமைப்பின் முடிவிலும் தோன்றும் அவரது 'நாம் டி ப்ளூம்' அல்லது முத்திரை (கையொப்பம்) "முவ்வா கோபாலா" என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் எஸ். எம்.கே. மாவட்ட பரிசத் உயர் நிலைப் பள்ளி, சேத்ரையா இளையோர் கல்லூரி , வி.எச். ஆர். இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி போன்ற அரசு நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது. மொவ்வா மண்டலத்தில் உள்ள கிரமங்களில் ஒன்றான குச்சிப்புடி கிராமத்தில் குச்சிப்புடி நடனம் பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook - Krishna" (PDF). Census of India. p. 16,244. Retrieved 17 February 2016.
- ↑ "District Level Mandal wise List of Villages in Andhra Pradesh" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. p. 9. Archived from the original (PDF) on 10 October 2014. Retrieved 19 September 2015.
- ↑ "Administrative Setup". Official website of Krishna district. National Informatics Centre. Archived from the original on 20 October 2014. Retrieved 25 September 2015.

