மொழி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி வங்கி (Language bank) என்பது மொழிபெயர்ப்பு அல்லது விளக்கம் தேவைபடும் பொது மக்களுக்கு அந்த தேவைகளை தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளர் உதவியுடன் வழங்க உதவுகின்ற ஓர் அமைப்பாகும். இத்தகைய அமைப்புகள் வழக்கமாக, ஆனால் எப்போதும் இத்தகைய சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. பெரும்பாலும் உள்ளூர் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒரு சேவையாக இப்பணிகள் நடைபெறுகின்றன. மொழி வங்கிகள் பெரும்பாலும் அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் போன்ற சுகாதார சேவை வழங்குநர்களுடன்[1] இணைந்து புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அகதி சமூகங்களுக்கு இத்தகைய சேவையை வழங்குகின்றன.[2]

மொழி வங்கிகளை அமைப்பதன் மூலம் பல்வேறு வகையான வணிகங்களும் உட்புற மொழி சேவை தேவைகளை நிர்வகிக்கின்றன. பெரும்பாலும், மொழித் திறன் கொண்ட ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தின் ஒரு பகுதியை மொழி வங்கிகளில் பங்கேற்று இச்சேவையை ஒரு நன்கொடையாகவும் வழங்குகிறார்கள்.[3] இந்த சூழ்நிலையில் இது "ஊழியர் மொழி வங்கி" என்று குறிப்பிடப்படுகிறது,.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ATA and American Red Cross Recruit Volunteer Interpreters". American Translators Association. Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
  2. Rowe, Lindsey (August 3, 2004). "Volunteer translators break down barriers". Seattle Post Intelligencer. http://www.seattlepi.com/local/184671_redcross03.html. 
  3. Kilgannon, Corey (2005-03-15). "Queens Hospitals Learn Many Ways to Say 'Ah'". த நியூயார்க் டைம்ஸ்: pp. B1. https://www.nytimes.com/2005/04/15/nyregion/15hospital.html. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_வங்கி&oldid=3315917" இலிருந்து மீள்விக்கப்பட்டது