மொலாய்க் காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொலாய் காடு என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தின், ஜோர்ஹாட் மாவட்டத்தில், கோகிலாமுக் அருகே உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் மஜூலி தீவில் உள்ள ஒரு காடு ஆகும்.

மொலாய் வனத்தை உருவாக்கிய ஜாதவ் மொலாய் பயேங்

வரலாறு[தொகு]

இந்தியச்சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனத்துறை ஊழியருமான ஜாதவ் பயேங்கின் செல்லப்பெயரான மொலாய் என்ற பெயர் இந்த காட்டுக்கு சூட்டப்பட்டது.

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோலாகாட் மாவட்டத்தின் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் அரசாங்கத்தின் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, 1983 ஆம் ஆண்டு இப்பணி கைவிடப்பட்ட பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர்.,[1] பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மர கன்றுகளைப் பராமரித்து அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். சுமார் 30 ஆண்டுகளாக சாதவ் பயேங்கால் தன்னந்தனியாக இக்காடு பராமரிக்கப்பட்டது. அவர் பராமரித்த இந்தக் காடு இப்போது சுமார் 1,360 ஏக்கர் / 550 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியதாகப் பரந்து நிற்கிறது.[2] பயேங் பிரம்மபுத்ரா ஆற்றில் மஜூலி தீவின் ஒரு மணல் படுகையில் மரங்களை நட்டு வளர்த்தார், இறுதியில் இன்று அது மிகப்பெரிய ஒரு வனப்பகுதியாக மாறியுள்ளது.

மொலாய் காட்டில் இப்போது வங்காள புலிகள், இந்திய காண்டாமிருகம், 100 க்கும் மேற்பட்ட மான் மற்றும் முயல்கள் குரங்குகள் மற்றும் பல வகையான பறவைகள் உள்ளன, இதில் ஏராளமான கழுகுகள் உள்ளன .[2] வால்கோல், வெண்மருது, டெர்மினியா அர்ஜுனா), கதலி ( லாகர்ஸ்ட்ரோமியா ஸ்பெசியோசா ), செம்மயிற்கொன்றை(டெலோனிக்ஸ் ரெஜியா ), பட்டு மரங்கள் ( அல்பீசியா புரோசெரா ), மோஜ் ( ஆர்க்கிடென்ட்ரான் பிகெமினம் ) மற்றும் கோங்கு மரங்கள் ( பாம்பாக்ஸ் சீபா ) உட்பட பல ஆயிரம் மரங்கள் உள்ளன. மூங்கில் 300 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு உள்ளது.[3]

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 யானைகளைக் கொண்ட ஒரு யானைக் கூட்டம் வழக்கமாக இந்த மொலாய்க் காடுகளுக்குச் சென்று பொதுவாக ஆறு மாதங்கள் வரை தங்கியிருக்கும். அவை காட்டில் 10 கன்றுகளை பெற்றெடுத்துள்ளன.[3]

ஊடகம்[தொகு]

மொலாய் காடு பற்றியும் சாதவ் பயேங்பற்றியும் பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன 2012 ஆம் ஆண்டில் ஜித்து கலிதா என்பவர் அசாமில் தயாரித்த தி மொலாய் ஃபாரஸ்ட்,[4] என்ற ஆவணப்படம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது. பயேங்கின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஜித்து கலிதாவும் தனது ஆவணப்படத்தின் மூலம் பயேங்கின் வன வாழ்க்கையைப் பற்றி ஆவணம் செய்ததின் மூலம் பயேங்கிற்கு வாழ்வில் ஓர் அங்கீகாரத்தை அளித்துள்ளார். இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆர்த்தி ஸ்ரீவாஸ்தவா இயக்கிய ஆவணப்படம் [5][6] மற்றும் வில்லியம் டக்ளஸ் மெக்மாஸ்டர் என்பவரின் 2013ஆம் ஆண்டு திரைப்பட ஆவணப்படமான ஃபாரஸ்ட் மேன் 2013 ஆம் ஆண்டு ஃபாரெஸ்டிங் லைஃப் [5] ஆவணப்படத்திலும் மொலை காடு இடம்பெற்றது.[7] 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஆவணப்படத்தின் பிந்தைய தயாரிப்புக்காக கிக்ஸ்டார்ட்டர் பிரச்சாரத்தில் [8] மக்கள் 8,327 அமெரிக்க டாலர்களை ஒப்படைத்தனர். இப்படம் 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டுக் காட்டப்பட்டது.[9][10]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொலாய்க்_காடு&oldid=2866519" இருந்து மீள்விக்கப்பட்டது