மொர்னிங்சைட் பூங்கா (ரொறன்ரோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொர்னிங்சைட் பூங்கா என்பது ரொறன்ரோ, இசுக்கார்பரோ நகரில் அமைந்துள்ள மிகப் பெரும் பூங்காக்களில் ஒன்று. இப் பூங்கா மொர்னிங்சைட் அவனியு வீதியில், கிங்சரன் வீதிக்கும், எல்சுமெயர் வீதிக்கும் இடையே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 416.7 ஏக்கர்கள் ஆகும். இதனோடாக ஐலேண்ட் கிரீக் ஓடுகிறது.

தானுந்துடன் நெடுந்தூரம் உள்ளே சென்று தரித்து, பின்னர் கால்நடையில் ஒற்றையடிப் பாதையில் பயணிக்கலாம். ரக்கூன், செந்நரி, உட்பட பல விலங்குகளும் பல்வேறு பறவைகள் இங்கு உண்டு. ஆபத்தனா மிருகங்கள் இங்கு இல்லை.

இந்தப் பூங்காவில் தமிழர்களின் பல ஒன்றுகூடல்கள் நடைபெறுவதுண்டு.

ஆள்கூற்று: 43°46′44″N 79°11′53″W / 43.779°N 79.198°W / 43.779; -79.198