மொரிசியசு சர்வதேச தமிழ் புலம்பெயர் ஒருமைப்பாடு மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரிசியசு சர்வதேச தமிழ் புலம்பெயர் ஒருமைப்பாடு மாநாடு என்பது நவமர் 8 - 10 2013 ஆம் ஆண்டு மொரிசியசில் நடந்த ஒரு மனித உரிமைகள் மாநாடு ஆகும். இந்த மாநாடு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலையைக் கண்டித்து ஒழுங்குசெய்யப்பட்டது. ஈழத் தமிழர்களினது அடிப்படை மனித உரிமைகள், தன்னாடி உரிமையை நிலைநாட்ட வேண்டியும், அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.[1]

இந்த மாநாட்டினை மொரிசியசு தமிழ் கோயில் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகியன இணைந்து நடத்தின.

மேற்கோள்கள்[தொகு]

  1. மொரிஷியஸ் நாட்டில் மூன்று நாளாக நடைபெற்ற ‘ சர்வதேச தமிழ் புலம்பெயர் ஒருமைப்பாடு மாநாடு ‘

வெளி இணைப்புகள்[தொகு]