மொரிசியசின் கனிமத் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரிசியசின் கனிமத் தொழில் (Mineral industry of Mauritius) மிகவும் சிறியதாகும். உலகின் கனிமங்களின் உற்பத்தி அல்லது நுகர்வில் மொரிசியசு நாடு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கவில்லை.[1] 2006 ஆம் ஆண்டு வரை, கட்டுமானத்திற்காக பசால்ட்டு பாறை, உரங்கள், பவளத்திலிருந்து சுண்ணாம்பு, அரை-உற்பத்தி செய்யப்பட்ட எஃகு மற்றும் சூரிய-ஆவியாக்கப்பட்ட கடல் உப்பு [1]ஆகியவற்றை உற்பத்தி செய்தது. உள்ளூர் நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட வைரத்தை வெட்டுகின்றன.[1]

2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, கனிம எரிபொருட்களின் இறக்குமதி மொத்த இறக்குமதியில் 17% ஆக இருந்தது. இரும்பு மற்றும் எஃகு, 2%; சிமெண்ட்டு, 1% ஆகவும் இருந்தது. மார்ச் 2006 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2006 வரை இறக்குமதி சார்ந்து மற்றும் பெட்ரோலியம் விலை உயர்வு பற்றிய கவலைகள், கடல்கடந்த பெட்ரோலிய ஆய்வுக்காக இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான விதேசு நிறுவனத்துடன் அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுத்தது.[1]

2006 ஆம் ஆண்டு மணல் உற்பத்தி 52% அதிகரித்தது; அரை உற்பத்தி செய்யப்பட்ட எஃகு, 2%; மற்றும் உரங்கள், 1%. என அதிகரித்தன. மணல் உற்பத்தியின் மதிப்பு சுமார் $1 மில்லியன் ஆகும்.[1]

காமா சிவிக் நிறுவனம் மற்றும் யுனைடெட் பசால்ட்டு பொருள்கள் நிறுவனம் ஆகியவற்றால் திரட்டப்பட்டவை மொரிசியசு வேதியியல் மற்றும் உரத் தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. உப்பை மோண்ட் கால்ம் நிறுவனமும் திர்ண்ட எஃகு நிறுவனம் மூலம் அரை-உற்பத்தி செய்யப்பட்ட எஃகும் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Thomas R. Yager. "The Mineral Industries of the Indian Ocean Islands" பரணிடப்பட்டது 2008-09-21 at the வந்தவழி இயந்திரம். 2006 Minerals Yearbook. U.S. Geological Survey (October 2007). This article incorporates text from this U.S. government source, which is in the public domain.