மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொரவெவ பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் கொமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி அனுராதபுர மாவட்டமும், கிழக்கில் குச்சவெளி, நகரமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுகளும், தெற்கில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 329 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 7,946 ஆகும். பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இப்பிரிவில், 1,300 முசுலிம்களும், 888 இலங்கைத் தமிழரும், 5,750 சிங்களவரும், 3 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 24 பேர் மட்டுமே.