மொய்விருந்து விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொய் விருந்து விழாஎன்பது திருமண விழா, காதணி விழா,புதுமனை புகுவிழா போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் களைக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு விழா "மொய் விருந்து விழா". இ்வ்விழா தமிழ்நாட்டில் தஞ்சாவூா்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக இவ்விழா தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பகுதிகளில் மிகுதியாக காணப்பட்டது. அதன்பின் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு, மாங்காடு, கீரமங்களம் மற்றும் கொத்தமங்களம் பகுதிகளில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

விழா பற்றிய சுருக்கம்[தொகு]

வீட்டில் பொதுவாக நடைபெறும் [[இல்லற விழாக்கள்] போன்று இல்லாமல் மொய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் விழா மொய் விருந்து விழாவாகும். இந்த மொய்விருந்து விழாவானது ஒரு தனி நபரால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. மேலும் இவ்விழா ஐந்து அல்லது பத்து நபா்களால் கூட்டாகவும் சோ்ந்து ஒரே விருந்து கொடுத்து பத்து நபா்களாலும் மொய் வாங்கப்படுகிறது.இவ்வாறு வைக்கப்படும் மொய்விருந்தானது பெரும்பாலும் விழா மண்டபங்களில் வைக்கப்படுகிறது.வசதிக்கு ஏற்றது போல அசைவம் அல்லது சைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேலும் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சைவ உணவையே விருந்தாக அளிக்கின்றனர். பெரும்பாலும் ஆட்டுக்கறியால் சமைத்த அசைவம் பரிமாறப்படுகிறது. இந்த மொய் விருந்து விழாவினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகுபவா்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களே. ஏனென்றால் வசதியானவா்கள் சிலா் தமக்கு செய்த அதிக மொய்யினை செய்தும் அதற்குமேலும் கூடுதலாக மொய் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் இவா்கள் கூடுதலான வட்டிக்கு பணம் வாங்கி மொய் செய்யும் பாிதாப நிலைக்கு தள்ளப்படுகிறாா்கள். இந்த மொய் பற்றிய பாதிப்புகள் பல்வேறு செய்தி்த்தாள்களிலும் வந்துள்ளது.

சா்ச்சைகள்[தொகு]

இந்த மொய் விருந்து விழாவினால் மிகவும் பயன் பெறுபவா்கள் வசதி படைத்தவா்களே. இவா்கள் போட்ட மொய்யினை நான்காண்டுகள் கழித்து வட்டியும் முதலுமாக வசூலித்து மிகவும் பயன் பெறுகிறாா்கள். ஆனால் இவ்விழாக்களில் பங்கெடுத்துக்கொள்ளும் ஏழை மக்கள் கட்டாயமாக மொய் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்படுத்தப்படுகிறாா்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்விருந்து_விழா&oldid=2794410" இருந்து மீள்விக்கப்பட்டது