உள்ளடக்கத்துக்குச் செல்

மொபிதா அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொபிதா அகமது (Mofida Ahmed)(1921-2008) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அசாமின் முதல் பெண் இந்திய மக்களவை உறுப்பினர் ஆவார். மேலும் இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சில முஸ்லிம் பெண்களில் ஒருவர்.[1] .

இளமையும் கல்வியும்

[தொகு]

மொபிதா நவம்பர் 1921-ல் ஜோர்ஹாட் நகரில் முகமது பருவா அலியின் மகளாகப் பிறந்தார்.[1] இவர் தன் கல்வியைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தார். பிற்கால வாழ்க்கையில், இவர் அசாமியப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதினார்.[1] இவரது படைப்புகளில் பிஸ்வாதிப்-பாபுஜி மற்றும் பரதர்-நேரு ஆகியவை அடங்கும்.[1]

தொழில்

[தொகு]

மொபிதா அகமது தேசிய சேமிப்புத் திட்டத்தில் கவுரவ பதவியினை 14-7-55 முதல் 19-1-57 வரையும், செஞ்சிலுவைச் சங்க (ஜோர்ஹாட்டில்) இணைச்செயலாளராக 1946 முதல் 1949 பணியாற்றினார்.[1] 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 1956ஆம் ஆண்டு இறுதி வரை கோலாகாட்டில் காங்கிரசின் மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவர் தேஜ்பூர் மாவட்டத்தில் மகிளா சமிதியின் சார்பில் (அக்டோபர் 1951 முதல் ஜனவரி 1953 வரை) மகப்பேறு பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்புக் குழுவில் உதவி செயலாளராகவும் பணியாற்றினார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மொபிதா அகமது 1940 திசம்பர் 11 அன்று அசானுதீன் அகமதுவை மணந்தார். இவர் வாசித்தல், பின்னல், தையல், தோட்ட பராமரிப்பு போன்ற பொழுதுபோக்கினை விரும்பினார்.[1] 2008ஆம் ஆண்டு சனவரி 17ஆம் தேதி தனது 88ஆவது வயதில் முதுமைக் காரணமாகக் காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Members Bioprofile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
  2. "Begum Mofida Ahmed, Assam's first woman MP, dies". Outlook (Indian magazine). https://www.outlookindia.com/newswire/story/begum-mofida-ahmed-assams-first-woman-mp-dies/536198. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொபிதா_அகமது&oldid=3993120" இலிருந்து மீள்விக்கப்பட்டது