மொண்டாங் பள்ளத்தாக்கு
| மொண்டாங் பள்ளத்தாக்கு Montang Valley | |
|---|---|
திரிபுராவில் அமைவிடம் | |
| உயர்ந்த புள்ளி | |
| ஆள்கூறு | 23°49′N 91°49′E / 23.817°N 91.817°E |
| புவியியல் | |
| அமைவிடம் | தெலியாமுரா, கோவாய் மாவட்டம், திரிபுரா |
| மூலத் தொடர் | அதரமுரா மலைகள் |
மொண்டாங் பள்ளத்தாக்கு (Montang Valley) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள சிவாலிக் மலையில் இருக்கும் ஒரு கிராமமும் சுற்றுலாத் தலமுமாகும்.[1][2] இப்பகுதி கோவாய் மாவட்டத்தின் தெலியமுரா துணைக்கோட்டத்தின் கீழ் உள்ளது.[3] அமைதி மலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[4] தலைநகர் அகர்தலாவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை எண் 8 (இந்தியா) என்ற சாலையிலிருந்து 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவிலும் தெலியமுரா நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக்கிராமத்தின் மிதக்கும் மேகங்களும் இயற்கை அழகும் கண்கவர் காட்ட்சிகளாக அறியப்படுகிறது.[5][6]
வரலாறு
[தொகு]2016 ஆம் ஆண்டில், பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கமல் கலை, அரசியல்வாதியாக மாறியவர், இந்தப் பள்ளத்தாக்கை ஆராய்ந்தார். மொண்டாங் பள்ளத்தாக்குப் பகுதியின் சுற்றுலாத் திறனைப் பயன்படுத்த அவர் புதுமையான திட்டங்களை வகுத்தார்.[7]
2021 ஆம் ஆண்டில், கமல் கலை திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுவின் நிர்வாக உறுப்பினரானார். ஒரு மூலோபாய அணுகுமுறையுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 8 என்ற சாலையிலிருந்து மோண்டாங் வரை இணைக்கும் சாலைகளை நிர்மாணிக்க பிரதான் மந்திரி கிராம் சதக் யோச்சனா திட்டத்திலிருந்து வெற்றிகரமாக நிதியைப் பெற்றார், மேலும் அங்கு ஒரு தோங் கர் எனப்படும் பாரம்பரிய பழங்குடி வீடு ஒன்றைக் கட்டினார்.[8][9][10] சமூக ஊடகங்களில் கலை அந்த இடத்தின் படங்களைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவை விரைவாக பிரபலமடைந்தன. [11][12] அதைத் தொடர்ந்து, அந்த இடம் எதிர்பாராத விதமாக பிரபலமடைந்தது, பரபரப்பான சுற்றுலா தலமாக மாறியது மற்றும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு புதிய இடமாகவும் உருவெடுத்தது.[13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "chaos erupts in montang valley in tripura locals oppose forest departments jfm plan". enewstime.in. https://enewstime.in/enews/chaos-erupts-in-montang-valley-in-tripura-locals-oppose-forest-departments-jfm-plan-24041.html.
- ↑ "Tripura's Montang Valley reels under tension over land issue" (in en). tripuratimes.com. https://tripuratimes.com/ttimes/tripura%E2%80%99s-montang-valley-reels-under-tension-over-land-issue-13672.html.
- ↑ Shenoy, Sanjana (3 January 2023). "Seeking A North East Hidden Gem In 2023? Head To Montang In Tripura!". Curly Tales. Retrieved 28 February 2024.
- ↑ "Montang or the mountain of peace in Tripura calls people to her lap". firstdespatch.com. https://firstdespatch.com/fda/montang-or-the-mountain-of-peace-in-tripura-calls-people-to-her-lap-prasenjit-debnath-25.html.
- ↑ "How Montang valley Become Tourist Attractive Place". 4 February 2024.
- ↑ Agnihotri, Akanksha (2 January 2023). "Montang is emerging as a new tourist destination on Tripura's tourism map" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/lifestyle/travel/montang-is-emerging-as-a-new-tourist-destination-on-tripura-s-tourism-map-101672657427536.html.
- ↑ "Montang, the place of endless beauty...." (in en). www.tripuratimes.com. https://www.tripuratimes.com/ttimes/montang-the-place-of-endless-beauty%E2%80%A6-4018.html.
- ↑ "Unexplored Montang new destination for tourists in Tripura". The Times of India. 2 January 2023. https://timesofindia.indiatimes.com/city/agartala/unexplored-montang-new-destination-for-tourists-in-tripura/articleshow/96672301.cms.
- ↑ "Montang, an unexplored paradise ready to attract visitors in Tripura" (in en). India Today NE. 1 January 2023. https://www.indiatodayne.in/tripura/story/montang-unexplored-paradise-ready-attract-visitors-tripura-491553-2023-01-01.
- ↑ "Tripura: Montang's 'Mountain of Peace' soon becoming a hot spot for back packers" (in en). assamtribune.com. 3 January 2023. https://assamtribune.com/north-east/tripura-montangs-mountain-of-peace-soon-becoming-a-hot-spot-for-back-packers-1455528.
- ↑ "Unexplored Montang rising on Tripura's tourism map". EastMojo. 1 January 2023. https://www.eastmojo.com/tripura/2023/01/01/unexplored-montang-rising-on-tripuras-tourism-map/.
- ↑ "Unexplored Montang rising on Tripura's tourism map". PTI News. https://old.ptinews.com/news/national/unexplored-montang-rising-on-tripura%E2%80%99s-tourism-map/486673.html.
- ↑ "Unexplored Montang Rising Is Slowly On Tripura's Tourism Map" (in en). News18. 5 January 2023. https://www.news18.com/news/lifestyle/unexplored-montang-rising-is-slowly-on-tripuras-tourism-map-6763039.html.
- ↑ "त्रिपुरा का नया टूरिस्ट स्पॉट बनकर उभर रहा 'मोंतांग', दूर-दूर से देखने आ रहे लोग" (in hi). www.abplive.com. 2 January 2023. https://www.abplive.com/lifestyle/health/tripura-beautiful-tourist-places-montang-emerging-as-new-tourist-destination-2297926.