உள்ளடக்கத்துக்குச் செல்

மொச்சோகிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொச்சோகிடே
சைனோடாண்டிசு நிஜாசாசே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைலுரிபார்மிசு
குடும்பம்:
மொச்சோகிடே

ஜோர்தான், 1923
பேரினம்

அகாந்தோகிளித்ரான்
அடோபோகிலசு
அடோபோடென்டாடசு
சிலோக்லானிசு
யூசிலிச்சிசு
மைக்ரோசினோடோன்டிசு
மொச்சோக்கியெல்லா
மொச்சோகசு
சைனோடோன்டிசு

மொச்சோகிடே (Mochokidae) என்பது கெளிறு மீன் குடும்பமாகும் (சைலுரிபார்மிசு வரிசை). இவை கீச்சொலி மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தலைகீழ் கெளிறு மீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன (இருப்பினும் அனைத்து இனங்களும் தலைகீழாக நீந்துவதில்லை). ஒன்பது பேரினங்களின் கீழ் சுமார் 200 வகையான மச்சக்கெண்டைகள் உள்ளன.[1] அனைத்து கெளிறு மீன்களும் ஆப்பிரிக்கா நன்னீர் இனங்கள் ஆகும்.[2]

மொச்சோகிடே சிற்றினங்கள் மூன்று இணை முகத்தாடிகளைக் கொண்டுள்ளன. சில நேரங்களில் நாசியில் தாடி இல்லை. சிபுகத்துக்குரிய தாடி கிளைத்துக் காணப்படலாம்.[3] உதடுகள் அடோபோச்சிலசு, சிலோக்லானிசு, யூச்சிலிச்ச்திசு ஆகியவற்றில் உறிஞ்சும் வாயாக மாறியுள்ளது.[3] கொழுப்பு துடுப்பு பொதுவாக மிக நீளமாக இருக்கும். முதுகு, மார்பக துடுப்புகள் பொதுவாக வலுவான, பூட்டுதல் பொறிமுறையுடன் கூடிய முள்ளெலும்புகளைக் கொண்டுள்ளன.[3] இவை 72 cm (28 அங்) செமீ (28 அங்குல SL) நீளம் வரை வளரக்கூடியவை.[3] இந்த குழுவில் சைனோடோண்டிசு நிக்ரிவென்டிரிசு, சினோடோன்டிசு ஏஞ்சலிக்கசு, சினோடோன்டிசு மல்டிபங்டாட்டசு போன்ற பல அதிகம் அறியப்பட்ட உயிரினங்களும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "{{{1}}} {{{2}}}" in FishBase. April 2006 version.
  2. Nelson, Joseph S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. ISBN 0-471-25031-7. கணினி நூலகம் 224053746.
  3. 3.0 3.1 3.2 3.3 Nelson, Joseph S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. ISBN 0-471-25031-7. கணினி நூலகம் 224053746.

வெளியிணைப்புகள்

[தொகு]

Tree of Life Mochokidae

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொச்சோகிடே&oldid=4270817" இலிருந்து மீள்விக்கப்பட்டது