மொசாம்பிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொசாம்பீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República de Moçambique
மொசாம்பிக் குடியரசு
மொசாம்பிக் கொடி மொசாம்பிக் சின்னம்
குறிக்கோள்
இல்லை
நாட்டுப்பண்
Pátria Amada
(முன்னர் Viva, Viva a FRELIMO)
Location of மொசாம்பிக்
தலைநகரம்
பெரிய நகரம்
மபூட்டோ
25°57′S 32°35′E / 25.950°S 32.583°E / -25.950; 32.583
ஆட்சி மொழி(கள்) போர்த்துகீசம்
மக்கள் மொசாம்பிக்கன்
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் அர்மாண்டோ குயெபுசா
 -  தலைமை அமைச்சர் லுயிசா டியொகோ
விடுதலை
 -  போர்த்துக்கல் இடமிருந்து ஜூன் 25 1975 
பரப்பளவு
 -  மொத்தம் 801590 கிமீ² (35வது)
309496 சது. மை 
 -  நீர் (%) 2.2
மக்கள்தொகை
 -  2007 குடிமதிப்பு 21,397,000 (52வது) 
 -  அடர்த்தி 25/கிமீ² (178வது)
65/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $27.013 பில்லியன் (100வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,389 (158வது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.390 (low) (168வது)
நாணயம் மொசாம்பிக்க மெடிகால் (Mtn) (MZN)
நேர வலயம் CAT (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கடைப்பிடிப்பதில்லை (ஒ.ச.நே.+2)
இணைய குறி .mz
தொலைபேசி +258
1. இந்நாட்டுக்கான மதிப்பீடுகள், எய்ட்ஸ் காரணமாக எழும் அளவு கூடிய உயிரிழப்புகளைக் கணக்கில் கொள்கின்றன. இதனால், குறைவான வாழ்நாள் எதிர்ப்பார்ப்பு திறன், கூடுதல் குழந்தைகள் இறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், குறைவான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி விகிதங்கள், வயது மற்றும் பால் வாரியான மக்கள் தொகைப் பரம்பல் கணக்கில் மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம்.

மொசாம்பிக் (Mozambique) என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: República de Moçambique, pron. IPA[ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ]), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.

போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொன்மையான பாய்மரக்கப்பல் ஓட்டும் முறை

மொசாம்பிக் 'அருமையான சுற்றுலாத் தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களும் உண்டு. கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீச கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் இந்நாட்டில் அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசாம்பிக்&oldid=1560656" இருந்து மீள்விக்கப்பட்டது