உள்ளடக்கத்துக்குச் செல்

மொகிந்தர் கவுர் பம்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொகிந்தர் கவுர் பம்ரா
பிறப்புஉகாண்டா
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், தோல்கி

மொகிந்தர் கவுர் பம்ரா(Mohinder Kaur Bhamra) பஞ்சாபின் நாட்டுப்புற இசை, கசல் (இசை) மற்றும் சீக்கிய இசைப் பாடல்களைப் பாடும் ஒரு பிரித்தானியர் இந்தியப் பெண் பாடகி ஆவார். பிரித்தானிய இந்தியப் பெண்களைப் பற்றிய பிரச்சினைகளை இவரது சில பாடல்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

பிறப்பு

[தொகு]

பிரித்தானியாவின் காலனியாக உகாண்டா இருந்தபோது இவர் 1936 ஆம் ஆண்டில் அங்கே பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

இவர் தனது ஐந்து அல்லது ஆறு வயதில் பிரித்தானிய இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.[1] இவர் லூதியானாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயின்றார். மேலும் குரு அங்கது தேவ் பஞ்சாப் கல்லூரியில் சீக்கிய இறையியல் மற்றும் பாரம்பரிய இசையில் மாலை வகுப்புகளை எடுத்தார்.[1] ஜவஹர்லால் நேரு மற்றும் விஜய லட்சுமி பண்டிட் ஆகியோர் அவரது பள்ளிக்கு வந்தபோது, ​​அவர்களுக்காக இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன வைப் பாடுமாறு அவரது ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அவற்றைப் பாடிக்காட்டினார்.[1] தனது இளம் வயதிலேயே கென்யாவுக்கு குடிபெயர்ந்து இந்திய இசைப் படிப்பை அஞ்சல் மூலம் முடித்தார்.[1] அவர் கிசுமு வில் உள்ள குருத்துவாரிலும், பின்னர், திருமணத்திற்குப் பிறகு, நைரோபியிலும் பாடத் தொடங்கினார்.[1][2] அங்கு, 1959 இல், அவர் தனது முதல் மகன் குல்ஜித்தைப் பெற்றெடுத்தார்.[3] அவர் ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார் மற்றும் பிரபலமான பாடல்களுக்கு தக்கவாறு இசையை மாற்றியமைத்தார்.[1]

இங்கிலாந்து வாழ்க்கை

[தொகு]

1961 ஆம் ஆண்டில், பம்ரா தனது மகனுடன் இங்கிலாந்துக்குச் சென்று, ஏற்கனவே லண்டனில் குடிசார் பொறியியல் படித்துக்கொண்டிருந்த தனது கணவருடன் சேர்ந்தார்.[3][4] தனது ஆரம்பகால வாழ்க்கையில், பாம்ரா காலையில் (ஆனந்த் காரஜ்) சீக்கிய திருமண விழாக்களில் பாடுவார், அதைத் தொடர்ந்து பிற்பகலில் வரவேற்பு விருந்தில் நிகழ்ச்சி நடத்துவார்.[1][5] தபேலா வாசித்த அவரது மகன் குல்ஜித் அவருடன் சென்றார், பின்னர் அவரது இரண்டு இளைய சகோதரர்களும் அவரைத் தொடர்ந்து வந்தனர்.[1][6] 1978 ஆம் ஆண்டில் அவரது குடும்பக் குழு அவதார் சிங் காங் கில் இணைந்தது.[5]

கலை வாழ்க்கை

[தொகு]

பிரித்தானிய இந்தியப் பெண்கள் பொதுகொண்டாட்டங்களில் பொதுவாக பங்கேற்பதிலிருந்து விலக்கப்பட்டிருந்த நேரத்தில்,அவர்களை கித்தா நடனம் மற்றும் விருந்து கொண்டாட்டங்களில் சேர பம்ரா ஊக்குவித்தார்.பஞ்சாபின் நாட்டுப்புற இசை, கசல் (இசை)கள் மற்றும் சீக்கிய இசை மூலம் இவர் பிரபலமடைந்தார். மற்றும் இடம்பெயர்வு, இங்கிலாந்தில் பணிபுரிதல் மற்றும் இங்கிலாந்தில் உள்ள இந்தியப் பெண்களுக்கு இடையிலான பிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இவரது பாடல்களுக்காகவும் பம்ரா பிரபலமானார்.அப்போதிருந்து, பிரிட்டனில் உள்ள இந்தியப் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதில் அவர் தனித்துவமானவராகக் காணப்படுகிறார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Purewal, Navtej; Bhamra, Mohinder Kaur (2012). "The sound of memory: interview with singer, Mohinder Kaur Bhamra". Feminist Review 100 (100): 142–153. doi:10.1057/fr.2011.59. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-7789. https://www.jstor.org/stable/41495199. 
  2. Bhogal, Gurminder Kaur (3 April 2017). "Listening to female voices in Sikh kirtan" (in en). Sikh Formations 13 (1–2): 48–77. doi:10.1080/17448727.2016.1147183. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-8727. https://www.tandfonline.com/doi/abs/10.1080/17448727.2016.1147183?journalCode=rsfo20. 
  3. 3.0 3.1 Bhachu, Parminder (2021). Movers and Makers: Uncertainty, Resilience and Migrant Creativity in Worlds of Flux (in ஆங்கிலம்). Routledge. pp. 70–80. ISBN 978-1-000-18175-3.
  4. Donnell, Alison (2002). Companion to Contemporary Black British Culture (in ஆங்கிலம்). Abingdon: Routledge. p. 30. ISBN 0-415-16989-5.
  5. 5.0 5.1 Bhamra, Kuljit; Sinthuphan, Jirayudh (2018). "8. At home in Southall: a Bhangra story". In Daboo, Jerri (ed.). Mapping Migration: Culture and Identity in the Indian Diasporas of Southeast Asia and the UK (in ஆங்கிலம்). Cambridge Scholars Publishing. pp. 154–182. ISBN 978-1-5275-1775-2.
  6. Daboo, Jerri (2018). Staging British South Asian Culture: Bollywood and Bhangra in British Theatre (in ஆங்கிலம்). Routledge. p. 77. ISBN 978-1-138-67714-2.
  7. Singh, Gurharpal; Tatla, Darshan Singh (2006). "9. Punjabi, bhangra and youth identities". Sikhs in Britain: The Making of a Community (in ஆங்கிலம்). London: Zed Books. pp. 203–204. ISBN 978-1-84277-717-6.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிந்தர்_கவுர்_பம்ரா&oldid=4393739" இலிருந்து மீள்விக்கப்பட்டது