மொகய்தீன் ஆண்டவர் மசூதி-நாகப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொகய்தீன் ஆண்டவர் மசூதி என்பது இந்தியா, தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்களாச்சேரி எனும் ஊரின் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த மசூதியானது 1936 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி கட்டுவதற்குரிய இடத்தை இந்தியாவில் இருந்து குடியேறிய மலேசியா மற்றும் பிரெஞ்சு இந்தோனேசியா மக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. நன்கொடைகள் சேகரிக்க உதவியவர்களில் முக்கியமானவர்கள் பிச்சைக்கனி இராவுத்தர் மற்றும்  முகமது யூசுப் இருவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது(இருவரும் இறந்து விட்டனர்).

இந்த மசூதி 1990 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்ட்டது. இதனை புதுப்பித்தவர் முகமது யூசுப் மகன் அப்துல் ஹமீது ஆவார். இவர்  எந்த பொது நன்கொடையும் இன்றி தனது சொந்த செலவின் மூலம் கட்டி முடித்தார். இவர் மசூதியைப் புதுப்பிக்க செலவான தொகை அமெரிக்க நாணய மதிப்பின்படி $100,000 (சுமார்  சுமார் 4 மில்லியன் இந்திய ரூபாய்கள்) ஆகும். இதனை ஒரே தவணையாக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து அனுப்பினார் என அப்துல் ஹமீது அவரகளின் மகன் அப்துல் பஷீர் அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் முகமது அவர்களின் குடும்பத்தில் கூட நன்காெடைகள் பெறப்படவில்லை.

இந்த மசூதிக்கு இன்று வரை மொகய்தீன் ஆண்டவர் மசூதி அல்லது மொகய்தீன் ஆண்டவர் மஸ்ஜித் என்றும் வழங்கப்படுகிறது. இம்மசூதியின் குவிமாடம் மதினாவில்(சவுதி அரேபியா) உள்ளது போன்று காணப்படுகிறது.

தொகுப்பு[தொகு]