உள்ளடக்கத்துக்குச் செல்

மை பென்குவின் ஃபிரன்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மை பென்குவின் ஃபிரன்டு
இயக்கம்டேவிட் சுசர்மன்
தயாரிப்பு
  • சேக்டு பேரென்சோன்
  • பேட்ரிக் ஏவால்ட்
  • ராபின் சோனாசு
  • யோனாதன் லிம்
  • நிக்கோலசு வெய்ன்பெர்க்
  • ஸ்டீவன் P. வெகுநேர
  • அந்திரேசு வென்ட்சு
கதை
  • பாலின தகுதி உல்ரிச்
  • கிறிசுடன் லைசரின்
இசைபெர்னாண்டோ வேல் (காம்போசர் )
நடிப்பு
  • யேன் ரெனோ
  • அட்ரினா பரிசா
ஒளிப்பதிவுஅந்தோணி டொட் மண்டலே
படத்தொகுப்புதெரசா போன்ற
கலையகம்
  • சிட்டி ஈல் ஆர்ட்சு
  • கன்டென்ட் சுடுடியோசு
விநியோகம்
  • ரோடிசிடே அட்ட்ரக்ஷன்சு
  • பாரிஸ் பிளம்ஸ் (பிரேசில் )
வெளியீடுஆகத்து 7, 2024 (2024-08-07)(France)
ஆகத்து 16, 2024(அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
ஓட்டம்97 நிமிடங்கள்
நாடுபிரேசில்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்,
பிரான்சு
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$5 மில்லியன்கள் [1]

மை பென்குவின் ஃபிரன்டு (My Penguin Friend) என்ற திரைப்படம் 2024இல் வெளியான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இது பிரேசில் நாட்டு மீனவரான யோவா பெரேரா டி சோசா, 'டின்டிம்' என்றழைக்கப்பட்ட ஒரு பென்குயினுக்கும் இடையிலான உண்மையான நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.[2] இப்படம் முதன்முதலில் பிரான்சில் ஆகத்து 7, 2024 அன்று வெளியிடப்பட்டது. மேலும், அமெரிக்காவில் ஆகத்து 16, 2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான கருத்துரைகளைப் பெற்றது.

படக்கரு

[தொகு]

ஒரு பெரும் கடல் புயலில் தன் மகனை இழந்த மீனவர் யோசுவா, மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். ஒருநாள் கடற்கரையில் எண்ணெய் கசிவில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு மெகல்லானிக் பென்குயினை அவர் காண்கிறார். அதைக் காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து, சுத்தப்படுத்தி உணவு கொடுத்துப் பராமரிக்கிறார். அந்தப் பென்குயின் குணமடைந்த பிறகு கடலுக்குத் திரும்பினாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 மைல்கள் பயணம் செய்து மீண்டும் யோவாவைச் சந்திக்க வருகிறது. இந்த அபூர்வ உறவு யோவாவின் குடும்பத்திலும் உள்ளூர் மக்களிடையேயும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

முதன்மை நடிகர்கள்

[தொகு]

இந்தத் திரைப்படத்தில் ஜோவா கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் இயேன் ரெனோ (Jean Reno) நடித்துள்ளார்.[3] அவரது மனைவி மரியாவாக அட்ரியானா பார்சா நடித்துள்ளார். டேவிட் சூர்மேன் இயக்கிய இந்தப் படம், பிரேசில், அர்கெந்தீனாவின் கடற்கரைப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. டின்டிம் கதாபாத்திரத்தில் நடிக்கப் பத்து உண்மையான பென்குயின்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "My Penguin Friend". Box Office Mojo. Retrieved November 1, 2024.
  2. Grobar, Matt (19 April 2022). "Biotech Entrepreneur Jonathan Lim Launches City Hill Arts; Unveils Slate Of Projects With Stampede Ventures & More". Deadline. https://deadline.com/2022/04/jonathan-lim-launches-city-hill-arts-unveils-upcoming-slate-1235005707/.
  3. "Animal eclipses co-star Jean Reno in filming of My Penguin Friend". The Guardian. Retrieved 2026-02-27.
  4. "My Penguin Friend Movie Review". Plugged In. Retrieved 2026-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_பென்குவின்_ஃபிரன்டு&oldid=4606577" இலிருந்து மீள்விக்கப்பட்டது