மை பின்த் முகம்மது அல் கலீஃபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மை பின்த் முகம்மது அல் கலீஃபா (Mai bint Mohammed Al Khalifa) ஓர் பஹ்ரைன் அரசியல்வாதி மற்றும் அமைச்சர் ஆவார்.

பணிகள்[தொகு]

இவர் 2009 ஆம் ஆண்டில் பஹ்ரைனில் தகவல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பஹ்ரைனில் தகவல் அமைச்சராக நியமிக்கபட்ட முதல் பெண் இவர். மேலும் இவர் உலக பாரம்பரியத்திற்கான அரபு பிராந்திய மையத்தின் குழுவின் தலைவராகவும், கலாச்சாரம் மற்றும் தொல்பொருட்களுக்கான பஹ்ரைன் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். [1] இவர் பஹ்ரைன் கலாச்சார அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் மத்திய கிழக்கு நாடுகளின் மிக சக்திவாய்ந்த அரபு பெண்களின் பட்டியலில் இவர் பெயர் ஆறாவது இடத்தில் பட்டியலிடப்பட்டது. இவர் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாரம்பரிய இடங்களில் பார்வையிட்டார் மற்றும் அதை புதுப்பிப்பதற்கான திட்டங்களை முன்மொழிந்தார். கலாச்சார அமைச்சராக இவர் பஹ்ரைனில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க பணியாற்றியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக நினைவுச்சின்ன நிதியத்தின் 50 வது ஆண்டுவிழாவில், பஹ்ரைனின் நினைவுச்சின்னங்களையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் இவர் வகித்த பங்கிற்காக இவருக்கு "வாட்ச் விருது" வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) சர்வதேச அபிவிருத்திக்கான நிலையான சுற்றுலா ஆண்டின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டது. [2]

குறிப்புகள்[தொகு]