மைய விழித்திரை நரம்பு அடைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைய விழித்திரை நரம்பு அடைப்பு
Central retinal vein occlusion
கண் வரைபடம்; விழித்திரை நரம்பு எண் 21 ஆகும்.
சிறப்புகண் மருத்துவம்

மைய விழித்திரை நரம்பு ( central retinal vein ) என்பது மைய விழித்திரை தமனி, சிரைக்கு இணையானதாகும். இது கண்ணின் விழித்திரையில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய நரம்பாக உள்ளது. இதில் அடைப்பு ஏற்படும்போது, அதை மைய விழித்திரை நரம்பு அடைப்பு (central retinal vein occlusion, also CRVO[1]) என்கிறார்கள். இந்த நரம்பில் அடைப்பு ஏற்படுவதால் பார்வை வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இந்த நரம்பில் அடைப்பு ஏற்படும்போது புதிய இரத்தக்குழாய்கள் உருவாகின்றன. இந்த இரத்தக்குழாய்கள், கசியும் தன்மை உடையதால் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.[2] மேலும், விழித்திரையில் உள்ள ‘மேக்குலா’ என்ற பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டு அதில் வீக்கமும் ஏற்படுகிறது. இதனால் கண் அழுத்த நோய் ஏற்படக்கூடும்.

சிகிச்சை[தொகு]

இதற்கான சிகிச்சையானது புதிய ரத்தக்குழாய் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய மருந்தைக் கண்ணுக்குள் செலுத்துவது ஆகும். மேக்குலாவில் ஏற்பட்ட வீக்கமும் இதனால் குறைகிறது. வயதானவர்களைக் காட்டிலும் வயது குறைவானவர்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படும்போது, சிகிச்சைக்குப் பின் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்பு சற்றுக் கூடுதலாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ophthalmology at a Glance, Jane Olver & Lorraine Cassidy, Blackwell Science 2005.[page needed]
  2. Hayreh, Sohan Singh; Zimmerman, M. Bridget; Podhajsky, Patricia (1994). "Incidence of Various Types of Retinal Vein Occlusion and Their Recurrence and Demographic Characteristics". American Journal of Ophthalmology 117 (4): 429–41. doi:10.1016/S0002-9394(14)70001-7. பப்மெட்:8154523. 
  3. மு. வீராசாமி (17 நவம்பர் 2018). "கண்ணிலே அடைப்பிருந்தால்..." கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2018.