மையவிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மையவிசை (Central force ) ,வட்டவடிவமான ஒருபதையில் சீராக சுழன்று கொண்டிருக்கும் ஒருபொருளின் வேகம் மாறாதிருந்த போதிலும் அப்பொருளின் திசைத் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது.நியூட்டனின் முதல் விதிப்படி அப்பொருளின் மீது ஒரு விசை செயல்பட்டால் அன்றி இது நிகழாது.அந்தப் பொருளுக்கு வட்டப்பாதையில் இயக்கத்தைக் கொடுக்கிற விசை,மையத்தை நோக்கியேசெயல்படுகிறது. இவ்விசை மையவிசை எனப்படும்.

மையம் விட்டோடு விசை(Centrifugal force ) மையவிசைச் செயல்படுவதால் ஒருபொருள் வட்டப்பாதையில் இயங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் மையம் நாடு விசையே ஆகும். ஆனால் நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு விசைக்கும் ஓர் எதிர் விசை எப்போதுமிருக்கும். எனவே மையம் நாடுவிசைக்கு எதிரானதும் சமமானதுமான ஒரு விசை உள்ளளது.இவ்வசையே மையம் விட்டோடு விசை எனப்படுகிறது. இவ்விரு விசைகளும்

mv2/r என்பதற்குச் சமமாகும். இங்கு

m என்பது பொருளின் நிறையினையும்

v என்பது பொருளின் திசைவேகத்தினையும்

r என்பது வட்டப்பாதையின் ஆரத்தினையும் குறிக்கிறது.

மையம் நாடு விசை (Centripetal force ) ஒரு வட்டத்தின் திசையில் ஆரத்தின் திசையில் செயல்படும் எல்லா விசைகளும் மையவிசைகள் எனப்படும். மையவிசைகளில் சில எப்போதும் மையத்தை நோக்கியே செயல்படுகின்றன.இத்தகைய விசைகள் மையம் நாடு விசைகள் எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மையவிசை&oldid=2442693" இருந்து மீள்விக்கப்பட்டது