உள்ளடக்கத்துக்குச் செல்

மையம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மையம் என்பது 1980களின் துவக்கத்தில் காலாண்டிதழாக வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது தமிழ்நாட்டின், சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக ஜெயதேவன் இருந்தார்.[1]

மையம் 1983 அக்டோபர்-திசம்பர் இதழைத் தனது முதல் இதழைக் கொண்டு வெளிவந்தது. கே. எம். ஆதிமூலம் வரைந்த ஓவியத்தை முதல் இதழ் அட்டைப்படமாக தாங்கி வெளிவந்தது. உள்ளே ஆதிமூலத்தின் அக உலகம் என்று சா. கந்தசாமி எழுதிய கட்டுரையையும் கொண்டிருந்தது.

மையம் இதழில் ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் வெளியாயின. மேலும் கதைகள், கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள் முதலியனவும் வெளியாயின. நீல பத்மநாபன், நகுலன், காஸ்யபன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆனந்த், ஆர். ராஜகோபாலன், காளி—தாஸ் முதலியவர்கள் மையம் காலாண்டு இதழில் எழுதினர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மையம்_(சிற்றிதழ்)&oldid=3447709" இலிருந்து மீள்விக்கப்பட்டது