மையப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மையப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு (Central Monitoring System, CMS) இந்திய அரசால் அமைக்கப்படும் ஓர் தரவு சேகரிப்பு அமைப்பாகும். 2012ஆம் ஆண்டு இதற்கான சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது; ஏப்ரல் 2013 முதல் இது இயங்கத் தொடங்கியுள்ளது.[1] ஊடகவியலாளர்களும் சமூகப் பிணைப்பு ஆர்வலர்களும் இந்தத் திட்டத்தின் திறன் "அமெரிக்க அரசின் சர்ச்சைக்குரிய பிரிசம் கண்காணிப்புத் திட்டம் போன்றளவிலான தீமை விளைவிக்ககூடியதாக" கருதுகின்றனர்.[2]

கட்டமைப்பு[தொகு]

மையப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு மூலமாக இந்திய அரசு தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதுடன் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்களைப் படிக்கவும் ஃபேஸ்புக், டுவிட்டர் அல்லது லிங்டின் இணையதளங்களில் பதிவுகளைப் பார்வையிடவும் கூகிள் தேடுதல்களின் சுவடு தொடரவும் இயலும்.[3][4]

இந்த அமைப்பை இந்திய அரசு நிறுவனமான தொலைதொடர்பியல் மேம்பாட்டு மையம் (சி-டாட்) புது தில்லியின் புறநகரில் நிறுவியுள்ளது. இது 900 மில்லியன் நகரபேசி (ஜிஎஸ்எம் , சிடிஎம்ஏ) மற்றும் நிலைத்த தொலைபேசி இணைப்புக்களையும் 160 மில்லியன் இணையப் பயனர்களையும் ‘நிகழ்நேர’ அடிப்படையில் பாதுகாப்பான ஈதர்நெட் குத்தகை இணைப்புகள் மூலமாக கண்காணித்து வருகிறது.[2]

குறைகாணல்[தொகு]

அரசின் மையப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு மனித உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் இந்திய குடிமகன்களின் தனியுரிமையைப் பாதிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "India's centralised monitoring system comes under scanner, reckless and irresponsible usage is chilling". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். பார்க்கப்பட்ட நாள் 12 June 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. 2.0 2.1 Singh, Shalini. "India’s surveillance project may be as lethal as PRISM." த இந்து. June 21, 2013. Retrieved on June 24, 2013.
  3. "இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு". மாலைமலர். 20 சூன் 2013. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 04 சூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "India sets up elaborate system to tap phone calls, e-mail". ராய்ட்டர்ஸ். Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2013. The new system will allow the government to listen to and tape phone conversations, read e-mails and text messages, monitor posts on Facebook, Twitter or LinkedIn and track searches on Google of selected targets, according to interviews with two other officials involved in setting up the new surveillance programme, human rights activists and cyber experts. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "India: New Monitoring System Threatens Rights". மனித உரிமைகள் கண்காணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.

வெளி இணைப்புகள்[தொகு]