மையநாடு

ஆள்கூறுகள்: 8°50′20.641″N 76°38′48.749″E / 8.83906694°N 76.64687472°E / 8.83906694; 76.64687472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மையநாடு
Mayyanad
சிற்றூர்
தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
ஆள்கூறுகள்: 8°50′20.641″N 76°38′48.749″E / 8.83906694°N 76.64687472°E / 8.83906694; 76.64687472
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்36,962
மொழிகள்
 • அலுவல் மொழிகாள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்691303
தொலைபேசி சுட்டு எண்+91-474-255****
வாகனப் பதிவுKL-02
கொல்லம்கொல்லம் நகரம் (10 கி.மீ)
தட்பவெப்ப நிலைவெப்பமண்டலம் (கோப்பென்)

மையநாடு (Mayyanad) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1]

மையநாடானது கொல்லம் மாவட்டத்தின் தென்மேற்கு புறநகர்ப்பகுதியில், கொல்லம் நகரத்தின் மையத்திலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தெற்கிலும், பரவூர் நகரத்துக்கு வடக்கே 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. மையநாட்டுக்கு கொல்லம் நகரத்திலிருந்தும், கோட்டயம் நகரத்திலிருந்தும் அவ்வப்போது பேருந்துகள் செல்கின்றன. இங்கு கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து செல்லும் உள்ளூர் தொடருந்துகள் மூலமாகவும் செல்லலாம். மையநாட்டையும், பரவூரையும் இணைக்கும் பாலமானது 2012 இல் கட்டி முடிக்கப்பட்டது, இதனால் மையநாட்டிலிருந்து கொல்லம் நகரத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தை எளிதாக்கியுள்ளது.

அமைவிடம்[தொகு]

மையநாடு பரவூர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது மேலும் இது மீன்பிடிக்காக குறிப்பிடப்பட்ட அளவு அரபிக் கடல் கடற்கரையையும் கொண்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தின் முக்கிய தொடருந்து நிலையங்களில் மையநாடு தொடருந்து நிலையம் ஒன்றாகும். மையநாடு கடற்கரைக்கு ஒரு சிறப்பாக, ஏரியும் கடலும் ஒன்றிணைக்கும் இடமாக உள்ளது. இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அந்த பகுதியின் வானிலை காரணமாக இரவில் பார்க்கும் காட்சி அற்புதமான அனுபவம்.

அடையாளங்கள்[தொகு]

மையநாட்டில் உமயநல்லூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் மாசற்ற கருத்தாக்க தேவாலயம் உட்பட பல கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவசால்கள் அமைந்துள்ளன. கடலுடன் ஏரி கலக்கும் இந்த இடமானது சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக உளது. அதே நேரத்தில் நீண்ட மணல் பரப்பைக் கொண்ட இயற்கை கடற்கரைகளானது நீச்சலுக்கு ஏற்றவை.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மையநாடு&oldid=3015414" இருந்து மீள்விக்கப்பட்டது