மைமூன் அரண்மனை

ஆள்கூறுகள்: 3°34′31″N 98°41′02″E / 3.57528°N 98.68389°E / 3.57528; 98.68389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைமூன் அரண்மனை
Istana Maimoon
ايستان ماءيمون
மைமூன் அரண்மனை, 2018
Map
பொதுவான தகவல்கள்
வகைஅரண்மனை
இடம்மேடான், வடக்குச் சுமாத்திரா, இந்தோனேசியா
ஆள்கூற்று3°34′31″N 98°41′02″E / 3.575201°N 98.683883°E / 3.575201; 98.683883
கட்டுமான ஆரம்பம்1888 ஓகத்து 26[1]
நிறைவுற்றது1898
செலவு1.000.000 குல்டன்[2]
உரிமையாளர்டெலி சுல்தானகம்
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு2,772 மீ²
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)தியோடோர் வான் எர்ப்
வலைதளம்
சுற்றுலாத்துறை அமைச்சக இணையம்

மைமூன் அரண்மனை (Maimoon Palace அல்லது Maimun Palace, இந்தோனேசிய மொழி: Istana Maimun என்பது டெலி சுல்தானகத்தின் ஓர் அரண்மனையும் இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திராவின் தலைநகரான மேடானில் நன்கு அறியப்பட்ட அடையாளமுமாகும். இன்று, இது ஓர் அருங்காட்சியகமாகச் செயற்படுகிறது.

1887-1891 ஆண்டுகளில் சுல்தான் மஉமூன் அல் ரசீது பெர்காசா அலமியாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனையை ஒல்லாந்துக் கட்டிடக் கலைஞரான தியோடூர் வான் எர்ப் 2,772 மீ² பரப்பளவில் மொத்தம் 30 அறைகளைக் கொண்டு வடிவமைத்துள்ளார். தற்போது இந்த அரண்மனை இந்நகரின் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது அதன் வரலாற்று பாரம்பரிய நிலை காரணமாக மட்டுமன்றி இவ்வரண்மனையின் தனித்துவமான உள்ளக வடிவமைப்பின் காரணமாகவும், மலாயக் கலாச்சார பாரம்பரியம், இசுலாமிய, இந்தியக் கட்டிடக்கலைகள் ஆகியவற்றின் கூறுகளையும் எசுப்பானிய, இத்தாலியத் தளபாடங்களையும் பொருத்துதல்களையும் கொண்டுள்ளமையே ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

  1. "Istana Maimun Medan". dolanyok.com.
  2. "Istana Maimun, Paduan Islam dan Eropa".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைமூன்_அரண்மனை&oldid=3712708" இலிருந்து மீள்விக்கப்பட்டது