மைனிச்சி ஷிம்புன்
மைனிச்சி ஷிம்புன்
[தொகு]மைனிச்சி ஷிம்புன்(Mainichi Shimbun) என்பது ஜப்பானின் முக்கிய நாளிதழ்களில் ஒன்றாகும். இது ஜப்பானின் நான்கு தேசிய நாளிதழ்களில் ஒன்றாகும்.இது மைனிச்சி நாளிதழ்கள் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.[1]
பதிப்புகள்
[தொகு]இது ஒரு நாளைக்கு இரண்டு முறை அச்சிடப்படும் பல உள்ளூர் பதிப்புகளைக்கொண்டுள்ளது. ஷிம்பன் தவிர, தி மைனிச்சி[2] என்ற ஆங்கில மொழி செய்தி வலைத்தளத்தையும் இயக்குகிறது. மேலும் மைனிச்சி வீக்லி என்ற இருமொழி செய்தி இதழையும் வெளியிடுகிறது. இது காகித அட்டைகள், புத்தகங்கள் மற்றும் பிற பத்திரிகைகளையும் வெளியிடுகிறது. இதில் சண்டே மைனிச்சி என்ற வாராந்திர செய்தி இதழும் அடங்கும்.
வரலாறு
[தொகு]மைனிச்சி ஷிம்புனின் வரலாறு மெய்சி காலத்தில் இரண்டு நாளிதழ்களை நிறுவியதன் மூலம் தொடங்கியது.1872 இல் முதன்முதலில் டோக்கியோ நிச்சி நிச்சி ஷிம்பன் என்ற நாளிதழ் துவங்கப்பட்டது.நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,1876 இல் ஒசாகா மைனிச்சி ஷிம்பன் நாளிதழ் துவங்கப்பட்டது.இரண்டு நாளிதழ்களும் 1911 இல் இணைக்கப்பட்டன. ஆனால் இரு நிறுவனங்களும் 1943 வரை தங்கள் நாளிதழ்களை தனித்தனியே சுதந்திரமாக வெளியிட்டன. 1943 ஆம் ஆண்டு இரண்டு நாளிதழ்களும் ஒன்றிணைக்கப்பட்டு மைனிச்சி ஷிம்புன் தலைமையின் கீழ் ஒரே நாளிதழாக கொண்டுவரப்பட்டது.
பசுமை தின சிறப்பு பதிப்பு
[தொகு]2016 ஆம் ஆண்டு மே 4 அன்று ‘பசுமை தினத்திற்காக’ வெளியிடப்பட்ட இந்த சிறப்புப் பதிப்பு, சுற்றுச்சூழல் செய்திகளுக்கு மட்டுமே அதன் பக்கங்களை அர்ப்பணித்தது .இது முற்றிலும் தாவர அடிப்படையிலான மைகளுடன் மக்கும் காகிதத்தில் அச்சிடப்பட்டது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் விதைகள் பதிக்கப்பட்டிருந்தது.நாளிதழ்களைப் படித்த பிறகு அதை நட வேண்டும். ஒருமுறை நடப்பட்டால், பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கையாளர்களை ஈர்க்க பூக்களாக வளரும். நாளிதழ்களில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த அடிப்படை வழிமுறைகளும் இருந்தன.இந்த முயற்சியில் பள்ளிகளையும் ஈடுபடுத்தினார்கள்.இது, குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய கல்வி கற்பிப்பதற்கும், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறைக்கு மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை கற்பிப்பதற்கும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://mainichi.jp/english/.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://web.archive.org/web/20120623082117/http://mainichi.jp/english/english/.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://lovepaper.org/plantable-papers-of-japan/.
{{cite web}}
: Missing or empty|title=
(help)