மைனா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைனா
மைனா (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
இயக்குனர் நித்யானந்தன்
நடிப்பு
  • திவ்யதர்ஷினி
  • ராஜ் காந்த
  • ஸ்ரீ வாணி
  • முக்தர் கான்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
மூல ஓட்டம் மார்ச்சு 2019 (2019-03) – ஒளிபரப்பில்

மைனா என்பது 2019 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடர் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பூவிழி வாசலிலே என்ற தொடரின் மறு தயாரிப்பாகும். இந்த தொடரின் கதை ஒட்டுமொத்தக் குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துரைக்கின்றது. நித்யானந்தன் என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார்.

கதை சுருக்கம்[தொகு]

ஏழை குடும்பத்தில் பிறந்த மைனா ஒரு மகிழ்ச்சியாக கிராமத்தில் அம்மாவின் அரவணைப்பிலும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். சிறு பெண்ணாக இருந்தாலும் அவளின் தைரியம், தன்னம்பிக்கை பெரியவர்களையே விஞ்சியது. வறுமையின் காரணத்தால் அவளின் தாயே அவளை குழந்தைத் தொழிலாளராக அனுப்பி வைக்கிறார்.

வேலைக்கு போன இடமோ சிங்கத்தின் கோட்டை, அங்கோ அரக்க குணம் படைத்த முதலாளி சிங்கப் பெருமாள். தனது அரசியல் மற்றும் பண பலத்தால் மொத்த ஊரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவன். அங்கு பல குழந்தைகளை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றான். இந்த இடத்தில்தான் வீர மங்கையான மைனா அடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கேள்வி கேட்கத் துவங்குகிறாள். இந்தத் அடிமை வாழ்க்கையிலிருந்து எப்படி எல்லோரையும் மீட்டு எடுக்கிறாள் இந்த ஏழு வயது சிறுமி மையனா என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

  • திவ்யதர்ஷினி - மைனா
  • ராஜ் காந்த - கந்த சாமி (மைனாவின் தந்தை)
  • ஸ்ரீ வாணி - கஸ்தூரி (மைனாவின் தாய்)
  • முக்தர் கான் - சிங்கப்பெருமாள்

ஆதாரங்கள்[தொகு]

  1. "Myna Launch Promo" (ta). www.youtube.com Colors Tamil.

வெளி இணைப்புகள்[தொகு]