மைத்ரேயி
மைத்ரேயி (Maitreyi) ஒரு இந்து தத்துவவாதி இந்திய வரலாற்றின்படி வேதகாலத்தில் வாழ்ந்தவர் ஆவார். பிரகதாரண்யக உபநிடதத்தில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என மதிப்பிடப்பட்டுள்ள வேதகால முனிவரான யாக்யவல்க்கியர் என்பவரின் இரு மனைவியரில் ஒருவராக இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்து மதக் காவியங்களான மகாபாரதம் மற்றும் கல்பம் என்பதிலும் காணப்படுகின்றன, இருப்பினும், மைத்ரேயியை ஒருபோதும் திருமணம் செய்யாத அத்வைத தத்துவஞானி என்று விவரிக்கப்படுகிறது. பண்டைய சமசுகிருத இலக்கியத்தில், அவர் "பிரம்மவதினி" (வேதத்தை விவரிப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.[சான்று தேவை]
பண்டைய இந்திய நூல்களில் மைத்ரேயி தோன்றுகிறார், இந்து மதக் கருத்தின்படி ஆத்மன் (சுய ஆன்மா) பற்றி யாக்யவல்க்கியர் என்ற முனிவருடன் உரையாடுவதாக பிரகதாரண்யக உபநிடதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் படி, அன்பு என்பது ஒரு நபரின் ஆத்மாவால் இயக்கப்படுகிறது, மற்றும் மைத்ரேயி ஆத்மன் மற்றும் பிரம்மனின் தன்மை மற்றும் அவற்றின் ஒற்றுமை பற்றியும் அத்வைத தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் உரையாடுகிறார்.
வேத இந்தியாவில் பெண்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புகளின் ஒரு எடுத்துக்காட்டு மற்றும் அவர்களின் தத்துவ சாதனைகள் என மைத்ரேயியை மேற்கோள் காட்டியது, அவர் இந்திய அறிவார்ந்த பெண்களின் சின்னமாகக் கருதப்படுகிறார், மேலும் புது தில்லியில் அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.[சான்று தேவை]

இளமை வாழ்க்கை[தொகு]

இதற்கிடையில் கல்ப காலத்தில் (வேதாங்கம்) ஆஸ்வலாயன சூத்ரத்தில் முனிவரின் மகள் சுலாபா மைத்ரேயியாக குறிப்பிடப்படுகிறார்.[1] வேதகால சகாப்தத்தில் பல பெண்கள் அறிஞர்களாக இருந்ததை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] விதேக ராஜ்ஜியத்தின் மிதிலை நகரில் இவரது தந்தை வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது, இவர் சனகனின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார்.[1]
மரபுரிமை[தொகு]
பல புராணங்களில் மத்ரேயியை பற்றி சொல்லப்பட்டுள்ளது., பண்டைய இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் நல்லொழுக்கமுள்ள பெண்களில் ஒன்றாக கருதப்படுகிறார்[2] இந்தியாவில் அறிவார்ந்த பெண்களை அடையாளப்படுத்துகிறார்.[3] தமிழ்நாட்டில் பின்னடைந்த ஒரு இடத்திலும் மற்றும் புது தில்லி அருகில் மைத்ரேயி வேத கிராமத்திலும் கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது,[4] .[5]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 John Muir, கூகுள் புத்தகங்களில் Metrical Translations from Sanskrit Writers, page 251–253
- ↑ Geaves 2009, ப. 484.
- ↑ Doniger 2010, ப. 187.
- ↑ Ahuja 2011, ப. 39.
- ↑ "An Eco-Spiritual Retreat". Maitreyi - The Vedic Village. http://maitreyivedic.in/. பார்த்த நாள்: 11 December 2015.
நூற்பட்டியல்[தொகு]
- Ahuja, M. L. (2011). Women in Indian Mythology. New Delhi: Rupa & Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-291-1825-7. https://books.google.com/books?id=day64iGXDFAC&pg=PT39.
- Bowen, Paul (1998). Themes and issues in Hinduism. Cassell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-304-33850-4.
- Brereton, Joel P. (2006). "The Composition of the Maitreyī Dialogue in the Brhadāraṇyaka Upaniṣad". Journal of the American Oriental Society 126 (3).