மைத்ரி பாக்
மைத்ரி பாக் Matri Baag Zoo | |
---|---|
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value). | |
21°10'17"N 81°21'11"E | |
திறக்கப்பட்ட தேதி | 1972[1] |
அமைவிடம் | மரோடா செக்டார், பிலாய், சத்தீசுகர் 490006 |
நிலப்பரப்பளவு | 111 acres (44.94 ha)[1] |
ஆண்டு பார்வையாளர்கள் | 911767[1] |
மைத்ரி பாக் (Matri Baag Zoo) மிருகக்காட்சிசாலை (நட்பின் உயிரியல் பூங்கா) இந்தியாவின் பிலாயில் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சிசாலையாகும். இந்த மிருகக்காட்சிசாலை 111 ஏக்கர் (44.94 ஹெக்டேர்) பரப்பில் உள்ளது. இது இந்திய உருக்கு ஆணையத்தினால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]மைத்ரி பாக் என்பது இந்தியா-சோவியத் ஒன்றிய நட்பின் அடையாளமாக நிறுவப்பட்ட ஒரு "நட்பு தோட்டம்" ஆகும். இதை பிலாய் உருக்கு ஆலை, 1972ஆம் ஆண்டு உருவாக்கிப் பராமரித்து வந்தது.[2]
ஈர்ப்புகள்
[தொகு]எஃகு நகர ஆண்கள் தங்கள் குடும்பத்தினருடன் எஃகு தயாரிப்பின் கடுமையிலிருந்து விடுபட, மைத்ரி பாக் பொழுதுபோக்குக்கிற்கான சரியான தேர்வாக உள்ளது. நாட்டின் மிகப் பெரிய இசை நீரூற்று மைத்ரி பாக் அழகைக் கூட்டுகிறது. இது ஏற்கனவே நன்கு அமைக்கப்பட்ட பசுமையான புல்வெளிகளைக் கொண்டுள்ளது. செயற்கை ஏரி, பொம்மை ரயில் மற்றும் பிரகதி மினார் ஆகியவற்றில் படகு வசதி எஃகு ஆலை மற்றும் சுற்றுப்புறங்களின் பரந்த காட்சியைக் காண வழிவகுக்கிறது.
இதுவே இந்தப் பகுதியின் மிகப்பெரிய மிருகக்காட்சிசாலையாகும். இங்கு கீழ்க்கண்ட விலங்குகள் உள்ளன.
- புலி
- சிங்கம் (கலப்பின)
- சிறுத்தை
- புள்ளிமான்
- கடமான்
- ரோஸ் கூழைக்கிடா
- பஞ்சவர்ண கிளி
- சிங்கவால் குரங்கு
கட்டண இடங்கள்
[தொகு]- செயற்கை ஏரியில் படகு சவாரி
- பொம்மை ரயில்
புகைப்பட தொகுப்பு
[தொகு]-
மைத்ரி பாக் ஏரியில் வங்காள புலி
-
கடமான் பூங்காவில் தடுமாறும்
-
மைத்ரி பாக் நுழைவு சிலைகள்
-
மைத்ரி பாக் அசோக சக்ரம்
-
சோவியத் ஒன்றியம் நினைவுக் குறிப்பின் முதல் துணைப் பிரதமரான அலெக்ஸி கோசிகின், 1961இல் பிலாய்க்குச் சென்றபோது மரங்களை நட்டார்
-
மைத்ரி பாக் நுழைவு வாயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "CZA". cza.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
- ↑ "Beef row: Bhilai Steel Plant cancels tender for zoo-animals' food". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.