மைதிலி மக்கள்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண். 73 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | 70 மில்லியன் (2011 கணக்கெடுப்பு)[1][2] |
நேபாளம் | 3.1 மில்லியன் (2011 கணக்கெடுப்பு)[3] |
மொழி(கள்) | |
மைதிலி மொழி இந்தி ,நேபாளி மொழி[4] | |
சமயங்கள் | |
பெரும்பான்மை: இந்து சமயம் Minority: இசுலாம் · பௌத்தம் · Others | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மகாய் மக்கள் · போச்புரி மக்கள் · அவதி மக்கள் |
மைதிலிகள் ( Maithils) மைதிலி மக்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள், இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த இந்தோ-ஆரிய இன-மொழிக் குழுவாகும், இவர்கள் மைதிலி மொழியைத் தங்கள் சொந்த மொழியாகப் பேசுகிறார்கள். இவர்கள் மிதிலைப் பகுதியில் வசிக்கின்றனர். [5] இது இந்தியாவின் வடக்கு பீகார் , சார்க்கண்டுவின் சில பகுதிகளை உள்ளடக்கியது [6] [7] . மேலும், நேபாளத்தின் மாதேஷ் மாகாணத்திலும் உள்ளடக்கியது. [8] மைதிலிப் பகுதி இந்து மதத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஏனெனில் இது இராமனின் மனைவியும் இலட்சுமியின் அவதாரமுமான சீதையின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. [9]
வரலாறு
[தொகு]வேத காலம்
[தொகு]விதேக இராச்சியத்தை நிறுவிய இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்களின் குடியேற்றத்திற்குப் பின்னர் மிதிலை முக்கியத்துவம் பெற்றது. வேத காலத்தின் பிற்பகுதியில் (சுமார். 1100-500 கிமு), விதேகம், குரு மற்றும் பாஞ்சாலத்துடன் தெற்காசியாவின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாக மாறியது. விதேக இராச்சியத்தின் அரசர்கள் சனகர்கள் என்று அழைக்கப்பட்டனர். [10]
விதேக சாம்ராஜ்யம் பின்னர் மிதிலையை தளமாகக் கொண்ட வஜ்ஜி நாட்டுடன் இணைக்கப்பட்டது. [11]
இடைக்கால காலம்
[தொகு]11 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை, மிதிலை பல்வேறு பூர்வீக வம்சங்களால் ஆளப்பட்டது. இவர்களில் முதன்மையானவர்கள் மைதிலி சத்திரிய வம்சாவளியைச் சேர்ந்த கர்னாட்டாக்கள், மைதிலி பிராமணர்களான ஆயின்வார் வம்சத்தினர் , ராஜ் தர்பங்காவின் கண்டவாலாக்கள் போன்றவர்கள். [12] இந்த காலகட்டத்தில்தான் மிலையின் தலைநகரம் தர்பங்காவுக்கு மாற்றப்பட்டது. [13] [14]
மைதிலி பேசும் வம்சங்கள் மற்றும் இராச்சியங்கள்
[தொகு]- கர்னாட் வம்சம், 1097 CE–1324 CE [15]
- ஆயின்வார் வம்சம், 1325 CE–1526 CE [16]
- ராஜ் தர்பங்கா, 1557 CE -1947 CE [17]
- மல்லர் வம்சம், 1201 CE-1779 CE [18]
- மக்வான்பூரின் சேனாக்கள், 1518 CE –1762 CE [19]
- பனைலி [20]
பிராந்தியம்
[தொகு]இந்தியா
[தொகு]பெரும்பான்மையான மைதிலிகள் பொதுவாக கங்கைக்கு வடக்கே வசிக்கின்றனர். தர்பங்கா மற்றும் வடக்கு பீகாரின் பிற பகுதிகளை மையமாகக் கொண்டது. [21] மைதிலியை தாய் மொழி பேசுபவர்களும் தில்லி, கொல்கத்தா, பட்னா, ராஞ்சி மற்றும் மும்பையில் வசிக்கின்றனர் .
இந்திய மிதிலையில் திருட், தர்பங்கா, கோசி, பூர்ணியா, முங்கர், பாகல்பூர் மற்றும் சந்தால் பர்கானா பிரிவுகள் உள்ளன.
குறிப்பாக தர்பங்கா, மிதிலையின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது. மேலும், அதன் "முக்கிய மையங்களில்" ஒன்றாக கருதப்படுகிறது. பிராந்தியத்தின் பெரும்பகுதியை ஆண்ட ராஜ் தர்பங்காவின் மையமாக இருந்தது. மைதிலி கலாச்சாரத்தின் முக்கிய அங்கமான மதுபானி ஓவியங்கள் தோன்றிய இடம் மதுபானி என்ற இடமாகும். இந்த மதுபானி மாவட்டம் நேபாள எல்லைப் பகுதியில் இருக்கிறது. சீதையின் பிறப்பிடம் சீதாமர்ஹி என்றும் , சீதா குண்ட் ஒரு முக்கிய யாத்திரை தலமாகவும் உள்ளது. இன்றைய மதுபானி மாவட்டத்தில் அமைந்துள்ள பலிராஜ்காத், பண்டைய மிதிலை இராச்சியத்தின் தலைநகராக கருதப்படுகிறது. [22] வைத்தியநாதர் கோயிலைக் கட்டியதில் மைதிலிகள் முக்கிய பங்கு வகித்தனர். இது அவர்களுக்கு ஒரு முக்கியமான யாத்திரை தலமாகும். [23] மைதிலி பேசும் பீகார் மற்றும் சார்கண்ட்டு மாநிலங்களில் மிதிலை என்ற தனி இந்திய மாநிலம் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]Notes
- ↑ "Kirti Azad demands a separate Mithila state". m.indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
- ↑ Dr. Arun C. Mehta. "District-wise Population (Census) Data: 2001 Census, India". Educationforallinindia.com. Archived from the original on 17 செப்டெம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2013.
- ↑ Dr. Arun C. Mehta. "Maithil Population (Nepali Census) Data: 2011 Census, Nepal". Educationforallnepal.com. Archived from the original on 17 செப்டெம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2013.
- ↑ "Demographics of Maithil population of Nepal".
- ↑ Burman, B.K.R.; Chakrabarti, S.B. (1988). Social Science and Social Concern: Felicitation Volume in Honour of Professor B.K. Roy Burman. Mittal Publications. p. 411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170990628. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
- ↑ Jha (2010). Sushasan Ke Aaine Mein Naya Bihar. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380186283.
- ↑ Brass (8 September 1994). The Politics of India Since Independence. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521459709. பார்க்கப்பட்ட நாள் 15 February 2017.
- ↑ Gellner, D.; Pfaff-Czarnecka, J. (2012). Nationalism and Ethnicity in a Hindu Kingdom: The Politics and Culture of Contemporary Nepal. Taylor & Francis. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136649561. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
- ↑ Minahan, J.B. (2012). Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia: An Encyclopedia. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781598846607. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
- ↑ மைக்கேல் விட்செல் (1989), Tracing the Vedic dialects in Dialectes dans les litteratures Indo-Aryennes ed.
- ↑ Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp. 85–86
- ↑ Jha, Makhan (1997). Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175330344. பார்க்கப்பட்ட நாள் 11 December 2016.
- ↑ Mandal, R. B. (2010). Wetlands management in North Bihar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180697074. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ Jha, Makhan (1997). Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175330344. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ Sinha, CPN (1969). "Origin of the Karnatas of Mithila – A Fresh Appraisal". Proceedings of the Indian History Congress 31: 66–72.
- ↑ Pankaj Jha (20 November 2018). A Political History of Literature: Vidyapati and the Fifteenth Century.
- ↑ Tahir Hussain Ansari (20 June 2019). Mughal Administration and the Zamindars of Bihar. pp. 200–223.
- ↑ Brinkhaus, Horst (1991). "The Descent of the Nepalese Malla Dynasty as Reflected by Local Chroniclers". Journal of the American Oriental Society 111 (1): 118–122. doi:10.2307/603754.
- ↑ Das, Basudevlal (2013). "Maithili in Medieval Nepal : A Historical Apprisal". Academic Voices 3: 1–3. doi:10.3126/av.v3i1.9704. https://doi.org/10.3126/av.v3i1.9704.
- ↑ Choudhary, Indra Kumar (1988). "Some Aspects of Social Life of Medieval Mithila, 1350–1750 A.D.: With a Special Reference to Contemporary Literatures". p. 74. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
- ↑ (India), Bihar; Choudhury, Pranab Chandra Roy (1957). "Bihar district gazetteers, Volume 17". p. 16. பார்க்கப்பட்ட நாள் 10 December 2016.
- ↑ "नालंदा ने आनंदित किया लेकिन मिथिला के बलिराजगढ़ की कौन सुध लेगा ? – News of Bihar". NewsOfBihar.com. 16 July 2016. Archived from the original on 26 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
- ↑ Narayan, Sachindra (1 June 1983). "Sacred Complexes of Deoghar and Rajgir". Concept Publishing Company – via Google Books.
உசாத்துணை
[தொகு]- Alan R. Beals & John Thayer Hitchcock (1960). "Field Guide to India". India: National Academies.