மைதிலி சங்கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைதிலி சங்கீதம் என்பது தெற்கு ஆசியாவின் மிகவும் பழமையான இசை வகைகளுள் ஒன்றாகும். இந்தியா மற்றும் நேபால் நாடுகளில் பிரிந்துள்ள மிதாலி பகுதியில் இச்சங்கீதம் தோன்றியது. மைதிலி சங்கீதம் துல்லியமாக எப்பொழுது தோன்றியது என்று கூற முடியாது, ஏனென்றால் இதன் வரலாறு மிக நீண்டுள்ளது. இதன் வயதைக் கணக்கிடும் போது மற்ற சங்கீதங்கள் இந்தியா மற்றும் நேபால் வளரவும் செழிக்கவும் உதவியிருந்திருக்கும். பொதுவாக மைதிலி சங்கீதம் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்டாலும், தற்பொழுது பலவிதமான நவீன இசைகருவிகளைப் பயன்படுத்தி தற்பொழுது நவீனமடைந்துள்ளது. இந்த இசை வகைக்கு சில முக்கியத்துவமான பங்களிப்பாளர்கள் மகா கவி வித்தியாபதி தாக்கூர், உதித் நாராயணன் சா, சாரதா சின்கா, பினித் தாக்கூர் மற்றும் இராம மண்டல்[1]. இப்பகுதியின் கிராமிய பாடல்கள் சாதாரண மனிதர்களின் பல்வேறு நிகழ்வுகளைக் கூறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maithili Music of India and Nepal : SAARC Secreteriat". SAARC Music Department. South Asian Association For Regional Cooperation. பார்த்த நாள் 26 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_சங்கீதம்&oldid=2404856" இருந்து மீள்விக்கப்பட்டது