மைசூர் - மயிலாடுதுறை விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர்-மயிலாடுதுறை விரைவு வண்டி
மைசூர்-மயிலாடுதுறை விரைவுவண்டி, தஞ்சாவூர் சந்திப்பில்
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்கர்நாடகா & தமிழ்நாடு
முதல் சேவைஆகஸ்ட் 01, 1997
நடத்துனர்(கள்)தென்மேற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைவிரைவுவண்டி
வழி
தொடக்கம்மயிலாடுதுறை சந்திப்பு MV
இடைநிறுத்தங்கள்20
முடிவுமைசூர் சந்திப்பு MYS
ஓடும் தூரம்677 km (421 mi)
சராசரி பயண நேரம்14மணி 05நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்16231 / 16232
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன இரண்டாம் வகுப்பு (2A), குளிர்சாதன மூன்றாம் வகுப்பு (3A), படுக்கை வகுப்பு (SL), முன்பதிவற்ற பெட்டிகள் (GS) & சாமான், ஜெனரேட்டர் மற்றும் கார்ட் பெட்டிகள் (EOG)
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்தொடருந்தில் உணவு வசதி, இணைய-உணவு வசதி (இணைய-உணவுவசதி தஞ்சாவூர் மற்றும் திச்சிராப்பள்ளி சந்திப்புகளில் மட்டுமே கிடைக்கும்)
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்Overhead racks
Baggage carriage
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு(MV↔ED → RPM/WAP-7 / ED/WAP-7) & (ED↔MYS → KJM/WAP-7 Running with LHB Coaches
பாதை1,676 mm (5 ft 6 in)
மின்சாரமயமாக்கல்25 kV AC 50 Hz உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை
வேகம்57 kilometres per hour (35 mph)
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்69 / 69A

மயிலாடுதுறை-மைசூர் விரைவுவண்டி (Mysore–Mayiladuthurai Express) என்பது கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு இரயில்வேயால் தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறையில் இருந்து கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூருக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் ஒரு விரைவு வண்டி ஆகும். இது தினசரி மயிலாடுதுறையில் இருந்து மாலை புறப்பட்டு மறுநாள் காலை மைசூரைச் சென்றடைகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் மாலை மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை மயிலாடுதுறையை அடைகிறது. இது வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்குகிறது.

வரலாறு[தொகு]

ஆரம்பத்தில், 31/32 என எண்ணிடப்பட்ட இந்தத் தொடருந்து சேவை ஈரோட்டில் ஐலண்ட் விரைவு வண்டியுடன் உடன் இணைக்கப்பட்ட 4 இணைப்பு பெட்டிகளுன் பயணத்தில் இருந்தது. பின்னர், அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த சி. கே. ஜாஃபர் ஷெரீப், பெங்களூரு மற்றும் திருச்சி இடையே, தெற்கு ரயில்வே மண்டலத்தின் பெங்களூரு ரயில்வே கோட்டத்தால் செயல்படுத்தப்பட்ட 6531/6532 எண்ணிட்ட பெங்களூர்-திருச்சியிடையே தனிப்பட்ட தொடருந்தை அறிமுகப்படுத்தினார்.

நீட்டிப்பு[தொகு]

ஆரம்பத்தில் இந்தத் தொடருந்தில் சில பெட்டிகள் இணைக்கப்பட்டு கரூரிலிருந்து மதுரைக்கு 6531A/6532A எனப் பிரிக்கப்பட்டன. தொடருந்து எண் 6531/6532 லிருந்து 6231/6232 ஆக மாற்றப்பட்டு, முதலில் மைசூர் வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் தஞ்சாவூருக்கும் அதன் பின்னர் நாகூர்வரையும் நீட்டிக்கப்பட்டது.[1]ஜூன் 29, 2002 இல் இத்தொடருந்து சேவை மைசூர் இரயில்வே கோட்டத்தில் இருந்து [[திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்திற்கு மாற்றப்பட்டதால், தொடருந்து எண் 6231/6232 லிருந்து 6831/6832 ஆக மாற்றப்பட்டு திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம் மண்டியாவின் மத்தூர் நிலையத்தில் தொடருந்து நிற்பது நீக்கப்பட்டது.[2] . 1995-1996 ரயில்வே வரவு-செலவு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட திருச்சி-நாகூருக்கிடையே பாதை மாற்றத்தைச் செயல்படுத்துவதற்காக திருச்சி-நாகூர் சேவை குறைக்கப்பட்டது. [3] திருச்சி-தஞ்சாவூர் பகுதியின் பாதைமாற்றப் பணி 1998 இல் நிறைவடைந்ததால், சேவை மீண்டும் தஞ்சாவூருக்கு நீட்டிக்கப்பட்டது.[1]

சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் வழித்தடத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் பகுதியின் பாதைமாற்றப் பணி அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், கும்பகோணம் வரை சேவையை நீட்டித்தார்.[4][5] இது ஜனவரி 6, 2006 முதல் தொடருந்து எஎண் 6831/6832 என்பது 6231/6232 என்ற மாற்றத்துடன் செயல்படுத்தப்பட்டது.[6][7] ஜூன் 17, 2006 முதல் இந்த சேவை மயிலாடுதுறை சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.[8][9][10][11]

திசம்பர் 2010 முதல் இந்தத் தொடருந்தின் எண்ணானது 6231 / 6232 இலிருந்து 16231 / 16232 ஆக மாற்றப்பட்டது.[12][13] பயண நேரத்தையும் பயணச்சீட்டுத்தொகையையும் குறைக்கும் வகையில், இத்தொடருந்தை சேலம்-நாமக்கல்-கரூர் தடத்தில் மாற்றிவிடவேண்டுமென காவிரி டெல்டாப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பயணம்[தொகு]

வண்டி எண் 16231/மயிலாடுதுறை→மைசூர் விரைவு வண்டி 057கிலோமீட்டர் என்ற வேகத்தில் 677 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 14மணி 05நிமிடங்களில் கடக்கிறது. மறுமார்கத்தில் 16232/மைசூர்–மயிலாடுதுறை விரைவு வண்டி அதேபோல் 57கி.மீ என்ற வேகத்தில் 677கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 14மணி 25நிமிடங்களில் கடக்கிறது. இதன் குறைந்தபட்ச வேகம் 57கி.மீ ஆகும். அதிகபட்ச வேகம் 110கி.மீ ஆகும்

கால அட்டவணை[தொகு]

  • 16231 – மயிலாடுதுறையில் இருந்து தினசரி மாலை 17மணி 55நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை மைசூர் சந்திப்பிற்கு காலை 08மணிக்கு சென்றடைகிறது.[14]
  • 16232 – மைசூர் சந்திப்பில் இருந்து தினசரி மாலை 16மணி 30நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.00 மணிக்கு மயிலாடுதுறை சந்திப்பை சென்றடைகிறது.[15]

சில முக்கிய நிறுத்தங்கள்: கும்பகோணம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஓசூர் மற்றும் பெங்களூர். இந்த தினசரி ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஒவ்வொரு மாலையும் மைசூர் எக்ஸ்பிரஸ் என புறப்பட்டு, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இரண்டு முறை எஞ்சினை திருப்பி, மறுநாள் காலை மைசூர் வந்தடைகிறது. மயிலாடுதுறை விரைவு வண்டி, மதியம் மதியம் 16232, அதே வழியைப் பின்பற்றி இரண்டு முறை எஞ்சினை திருப்பி, மறுநாள் காலை மயிலாடுதுறை சந்திப்பை வந்தடைகிறது.[a]

மைசூர் விரைவுவண்டி-பெயர்ப்பலகை
16231 ~ மயிலாடுதுறை சந்திப்பு → மைசூரு சந்திப்பு ~ மைசூர் விரைவு வண்டி
நிலையம் நிலைய குறியீடு வருகை புறப்பாடு நாள்
மயிலாடுதுறை சந்திப்பு MV - 17:55 1
குத்தாலம் KTM 18:07 18:08
ஆடுதுறை ADT 18:20 18:21
கும்பகோணம் KMU 18:33 18:35
தஞ்சாவூர் சந்திப்பு TJ 19:08 19:10
பூதலூர் BAL 19:27 19:28
திருவெறும்பூர் TRB 19:45 19:46
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி) TPJ 20:25 20:35 2
திருச்சிராப்பள்ளி கோட்டை TP 20:43 20:45
குளித்தலை KLT 21:19 21:20
கரூர் சந்திப்பு KRR 21:58 22:00
ஈரோடு சந்திப்பு ED 23:20 23:30
சேலம் சந்திப்பு SA 00:17 00:18
தர்மபுரி DPJ 02:14 02:15
ஒசூர் HSRA 03:48 03:50
கார்மெலாராம் CRLM 04:23 04:25
பெங்களூர் கிழக்கு BNCE 04:56 04:58
பெங்களூர் கண்டோன்மென்ட் BNC 05:03 05:05
பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் SBC 05:40 05:45
கங்கேரி KGI 06:04 06:05
மாண்டியா MYA 07:04 07:05
மைசூர் சந்திப்பு(மைசூர்) MYS 08:00 -
16232 - மைசூர் சந்திப்பு → மயிலாடுதுறை சந்திப்பு ~ மயிலாடுதுறை விரைவு வண்டி
மைசூர்) MYS - 16:30 1
மாண்டியா MYA 17:10 17:12
மத்தூர் MAD 17:30 17:31
கங்கேரி KGI 18:19 18:20
பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் SBC 18:50 19:00
பெங்களூர் பாளையம் தொடருந்து நிலையம் BNC 19:10 19:12
கார்மெலாராம் CRLM 19:46 19:47
ஒசூர் HSRA 20:12 20:14
தர்மபுரி DPJ 21:56 21:58
சேலம் சந்திப்பு SA 23:42 23:45
ஈரோடு சந்திப்பு ED 00:50 01:00
கரூர் சந்திப்பு KRR 01:58 02:00
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 04:00 04:10
திருவெறும்பூர் TRB 04:28 04:29
பூதலூர் BAL 04:44 04:45
தஞ்சாவூர் சந்திப்பு TJ 05:03 05:05 2
கும்பகோணம் KMU 05:38 05:40
ஆடுதுறை ADT 05:50 05:51
குத்தாலம் KTM 06:02 06:03
[[மயிலாடுதுறை சந்திப்பு]) MV 07:00 -

பெட்டிகள்[தொகு]

இந்தத் தொடருந்தில் ஆரம்பத்தில் 16 பெட்டிகள் இருந்தன, கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி ஜூலை 1, 2005 அன்று சேர்க்கப்பட்டது.[16] மேலும் ஒரு படுக்கை வசதி பெட்டி ஜூன் 6, 2013 அன்று சேர்க்கப்பட்டது,[17] மேலும் இரண்டு கூடுதல் படுக்கை வசதி பெட்டிகள் ஜூன் 8, 2013 அன்று சேர்க்கப்பட்டன.[18] தற்போது, இந்த வண்டியில் ஒரு குளிர்சாதன இரண்டாம் வகுப்பு (2 ஏ), இரண்டு குளிர்சாதன மூன்றாம் வகுப்பு (3 ஏ), 12 படுக்கை வசதி பெட்டிகள் (எஸ்எல்), 4 முன்பதிவு செய்யப்படாத (பொது) பெட்டிகள் (யுஆர்/ஜிஎஸ்) மற்றும் இரண்டு சாமான் பெட்டிகள் (எஸ்எல்ஆர்) என 21 பெட்டிகள் உள்ளன.[b]

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
SLR GS GS S13 S12 S11 S10 S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B3 B2 B1 A1 SLR

வண்டி பரிமாற்றம்[தொகு]

திருச்சிராப்பள்ளி-மயிலாடுதுறை விரைவு வண்டி, மைசூர்-தூத்துக்குடி விரைவு வண்டி இரண்டுடனும் தனது பெட்டிகளை இத்தொடருந்து பகிர்ந்து கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Syed Muthahar, Saqaf (5 June 2008). "No change in train origin". The Hindu (Tiruchi). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/No-change-in-train-origin/article15236021.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  2. "Four new trains from Bengaluru soon". The Hindu (Bengaluru). 29 June 2002. http://hindu.com/2002/06/29/stories/2002062904780500.htm. பார்த்த நாள்: 19 March 2014. 
  3. "Railway Budget : 1995–1996" (PDF). Indian Railways. Railway Board. p. 11. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  4. "Speech: Railway Budget 2005-06". Press Information Bureau. Government of India. 26 February 2005. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  5. "28 trains extended". The Hindu (New Delhi). 27 February 2005. http://www.hindu.com/2005/02/27/stories/2005022704361000.htm. பார்த்த நாள்: 19 March 2014. 
  6. "Revised Train Timings of South Western Railways". Deccan Herald (Hubli). 29 June 2005. http://archive.deccanherald.com/Deccanherald/jun292005/state1918372005628.asp. பார்த்த நாள்: 19 March 2014. 
  7. "Express train to be extended up to Kumbakonam". The Hindu (Tiruchi). 6 January 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/express-train-to-be-extended-up-to-kumbakonam/article3236073.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  8. "Railway Budget : 2006–2007" (PDF). Indian Railways. Railway Board. p. 11. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  9. "Extension of routes of 37 trains". The Hindu (New Delhi). 25 February 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/extension-of-routes-of-37-trains/article3183259.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  10. "`Track-doubling work ignored in rail budget'". The Hindu (Mysore). 26 February 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/trackdoubling-work-ignored-in-rail-budget/article3183857.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  11. "Express train extended to Mayiladuthurai". The Hindu (Bengaluru). 19 May 2006. http://www.hindu.com/2006/05/19/stories/2006051903210400.htm. பார்த்த நாள்: 19 March 2014. 
  12. "Railways to Switch to 'Five' – Digit System for Numbering all its Passenger Carrying Trains from December 2010". Press Information Bureau. 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  13. "Railways migrate to 5-digit number scheme to monitor trains". The Times of India (New Delhi). 20 December 2010. https://timesofindia.indiatimes.com/india/Railways-migrate-to-5-digit-number-scheme-to-monitor-trains/articleshow/7132909.cms. பார்த்த நாள்: 19 March 2014. 
  14. மயிலாடுதுறை---->மைசூர் கால அட்டவணையும் வழித்தடமும்
  15. மைசூர்--->மயிலாடுதுறை கால அட்டவணையும் வழித்தடமும்
  16. "Partial cancellation of train services - Augmentation". The Hindu (Bengaluru). 16 June 2005. http://www.hindu.com/2005/06/16/stories/2005061610800500.htm. பார்த்த நாள்: 19 March 2014. 
  17. "Extra coach". The Hindu (Mysore). 6 June 2013. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/extra-coach/article4786620.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  18. "Two more coaches for Mysuru Express". The Hindu (Tiruchi). 8 June 2013. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/two-more-coaches-for-mysore-express/article4793870.ece. பார்த்த நாள்: 19 March 2014. 

குறிப்புகள்[தொகு]

  1. கால அட்டவணையும் வழித்தடமும் மாற்றத்துக்குரியது.
  2. பெட்டிகளின் தொகுப்பு மாற்றத்துக்குரியது.