மைசூர் அம்பா விலாச அரண்மனையில் உள்ள கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவேத வராகசாமி கோயில்
இந்துக் கோயில்கள்
மைசூரின் அம்பா விலாஸ் அரண்மனையில் உள்ள கோவில்கள்
மைசூரின் அம்பா விலாஸ் அரண்மனையில் உள்ள கோவில்கள்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூர் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

மைசூர் அம்பா விலாச அரண்மனையில் உள்ள கோயில்கள் (group of temples at the Amba Vilas Palace) என்பவை உடையார் வம்சத்தின் மன்னர்கள் மைசூர் இராச்சியத்தை கி.பி 1399 முதல் 1947 வரை ஆட்சி செய்த பல்வேறு காலங்களில் கட்டப்பட்டது. இந்த கோவில்கள் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் [1] கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக பராமரிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இலட்சுமிரமண சுவாமி கோயில்[தொகு]

இந்த குழுவில் உள்ள, இலட்சுமிரமண சுவாமி கோயில் (இந்து மத கடவுள் விஷ்ணுவின் அவதாரம்) இரண்டாம் சாமராச உடையார் (பொ.ச.1478-1513) ஆட்சியின் போது 1499 ஆம் குடமுழுக்கு நடைபெற்றது. இத்தகவலை, கோயில்களில் காணப்படும் பழமையான [மண்டபம்|மண்டப]] கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. அரண்மனையின் வரலாற்றில் இந்த கோயில் ஒரு வரலாற்றுச் சான்றாக, முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் மூன்றாம் கிருட்டிணராச உடையாரின் (பொ.ச.1799-1868) முடிசூட்டுதல் நிகழ்ச்சி, இந்த கோவிலில் 1799 சூன் 30 அன்று நடைபெற்றது. மற்றொரு கணக்கின் படி, விஜயநகர மன்னர்கள் துளுவ நரச நாயக்கன் மற்றும் (பொ.ச.1491-1503), விஜயநகர பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரால் (பொ.ச.1509-1529) இக்கோவில் கட்டப்பட்டது. முதலாம் நரசராச உடையார் (பொ.ச.1638-1659) என்பவரால் இக் கோயிலில் மண்டபம் சேர்க்கப்பட்டது. மேலும், 1851 ஆம் ஆண்டில், மூன்றாம் கிருட்டிணராச உடையார் என்பவரால், இக்கோயிலின் பிரதான வெளிப்புற வாசல் மேலே கோபுரம் ஒன்று கட்டப்பட்டது [2] [3] என்றத் தகவல்கள் கோயில் கல்வெட்டுகளின் மூலமாக அறியப்படுகிறது.

சுவேத வராகசுவாமி கோயில்[தொகு]

இந்திய தொல்லியல் ஆய்வின்படி, சுவேத வராகசுவாமி கோயில் போசளர் கட்டிடக்கலை பாணியில் சிக்கதேவராச உடையாரின் (பொ.ச.1673-1704) ஆட்சியின் போது. கட்டப்பட்டது. இந்த கோயில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கும் (துவஜஸ்தம்பம்), மண்டபத்தில் உள்ள தூண்களுக்கும் பிரசித்தி பெற்றவையாக உள்ளது. மேலும், இக்கோயில் மண்டபத்தின் உள் சுவர்களில், இந்து காவியங்களின் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்களும் காணப்படுகிறது. மற்றொரு கணக்கின் படி, மைசூரின் முதல் திவானாக இருந்த திவான் பூர்ணையா, (1799-1813 ), அரசரான கிருட்டிணராச உடையாரின் விருப்பத்தின் படி, சிமோகாவிலிருந்த ஒரு இடிந்த போசளர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களை பயன்படுத்தி இக்கோவில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. [2] [3]

திரிநயனேசுவர சுவாமி கோயில்[தொகு]

திரிநயனேசுவர சுவாமி கோயில் ராஜா உடையாரின் (1569) ஆட்சிக்கு முன்பு கட்டப்பட்டது, இது முதலில் அரண்மனை கோட்டை மைதானத்திற்கு வெளியே இருந்தது. பின்னர், முதலாம் நரசராச உடையார் (ஆட்சி 1659-1673) மற்றும் அவரது வாரிசான தொட்ட தேவராச உடையார், ஆகியோரால் கோட்டையின் சுற்றளவு நீட்டிக்கப்பட்டது. தற்போது கோவில் கோட்டையின் அங்கமாக உள்ளது. இக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் இருந்து, மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1829) பிரசன்ன கிருட்டிணசாமி கோயிலை நிறுவியது, உடையார் குடும்பம் யது இனத்துடன் கொண்டிருக்கும் புகழ்பெற்ற தொடர்பைக் காட்டுவதாக அறியப்படுகிறது. குழந்தைக் கடவுளான கிருட்டிணரின் ஊர்ந்து செல்லும் உருவம், இந்து தெய்வங்கள், புனிதர்கள் ஆகியோரின் நாற்பது வெண்கல உருவங்களும் 19 ஆம் நூற்றாண்டின் சுவரோவியங்களும் இக்கோவிலில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. [2] [3]

கிள்ளி வெங்கடரமண சுவாமி கோயில்[தொகு]

கிள்ளி வெங்கடரமண சுவாமி கோயிலின் கட்டுமானம் (இந்து கடவுளான விஷ்ணுவின் ஒரு வடிவம்) மைசூரில் பெரும் அரசியல் சூழ்ச்சியின் போது நடந்தது. 1760 வாக்கில், மைசூர் அரச குடும்பத்தை, ஐதர் அலி ( 1760-1782) ஓரங்கட்டினார். ஐதர் அலிக்குப் பிறகு, அவரது மகன் திப்பு சுல்தான் (1782-1799) மைசூர் இராச்சியத்தின் மீது, தன் முழு அதிகாரத்தையும் தொடர்ந்து பயன்படுத்தினார், இதனால் உடையார் ஆட்சியாளர்களை சக்தியற்றவர்களாக மாற்றினார். இந்த நேரத்தில், இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் (1734-1766 ஆம் ஆண்டு ஆட்சி) ராணி லட்சுமம்மணி, வெங்கடரமண கடவுளை, தான் உறங்கும்போது கனவில் கண்டார். கனவில், கடவுள், தனது உருவத்தை அருகிலுள்ள பால்மூரியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து கொண்டு வந்து அரண்மனை மைதானத்தில் அர்ப்பணிக்குமாறு அறிவுறுத்தினார் என்றும், அதற்கு ஈடாக, உடையார் குடும்பம் மீண்டும் மைசூரை ஆட்சி செய்ய சுதந்திரமாகிவிடும் என்று கதை கூறப்படுகிறது. 1799 ஆம் ஆண்டில், நான்காவது ஆங்கிலேய-மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்த பிறகு, ஆங்கிலேயர்கள் உடையார் குடும்பத்தை மைசூர் அரியணையில் மீண்டும் அமர்த்தினர்.

பிற கோயில்கள்[தொகு]

புவனேசுவரி கோயில் (1951), காயத்ரி கோயில் (1953) ஆகியவை இந்த வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான செயசாமராச உடையாரால் கட்டப்பட்டன. [2] [3]

கோயில்களின் அட்டவணை விபரம்[தொகு]

மைசூர் அம்பா விலாச அரண்மனையின் கோயில்கள் (பொ.ச. 1499-1947)
பெயர் புரவலர் கட்டிடக்கலை ஆண்டு
இலட்சுமிரமண சுவாமி இரண்டாம் சாமராச உடையார் திராவிட 1499
திருநயனேசுவர சுவாமி ஐந்தாம் சாமராச உடையார் திராவிட முன் 1578
சுவேதா வராகசாமி சிக்க தேவராச உடையார் போசளர் 1673-1704
மகாலட்சுமி சிக்க தேவராச உடையார் போசளர் 1673-1704
கிள்ளி வெங்கட்ரமண சுவாமி இரண்டாம் கிருட்டிணராச உடையார் திராவிட 1734-1766
பிரசன்ன கிருட்டிணசுவாமி மூன்றாம் கிருட்டிணராச உடையார் திராவிட 1829
புவனேசுஸ்வரி ஜெயச்சாமராச உடையார் திராவிட 1951
காயத்ரி ஜெயச்சாமராச உடையார் திராவிட 1953

குறிப்புகள்[தொகு]

  • "Mysore Palace". Deputy Directors Office. Mysore Palace Board, Karnataka, India. Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
  • "Temples in Mysore Palace". ourkarnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
  • "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 18 December 2014.

படத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 18 December 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 "Mysore Palace". Deputy Directors Office. Mysore Palace Board, Karnataka, India. Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.
  3. 3.0 3.1 3.2 3.3 "Temples in Mysore Palace". ourkarnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-15.