மைசூரு–பெங்களூரு ராஜ்யா ராணி விரைவுவண்டி
மைசூரு–பெங்களூரு ராஜ்யா ராணி விரைவுவண்டி | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | ராஜ்யா ராணி விரைவு வண்டி[1] | ||
முதல் சேவை | 1 சூலை 2011 | ||
நடத்துனர்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||
வழி | |||
தொடக்கம் | பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் | ||
இடைநிறுத்தங்கள் | 8 | ||
முடிவு | மைசூர் சந்திப்பு | ||
ஓடும் தூரம் | 139 km (86 mi) | ||
சராசரி பயண நேரம் | 2 மணி 40 நிமிடம் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 16557 / 16558 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | முன்பதிவில்லாப் பொதுப்பெட்டி, குளிரூட்டப்பட்ட 2 அடுக்குப் பெட்டி, குளிரூட்டப்பட்ட 3 அடுக்குப் பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | இல்லை | ||
உணவு வசதிகள் | உணவக வசதியுடன் | ||
காணும் வசதிகள் | 16215/16216 சாமுண்டி விரைவுவண்டி பெட்டிகள் இணைப்பு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | ஐசிஎப் பெட்டிகள் | ||
பாதை | 1,676 mm (5 ft 6 in) | ||
வேகம் | 52 km/h (32 mph) average including halts | ||
|
மைசூரு–பெங்களூரு ராஜ்ய ராணி விரைவுவண்டி (16557/16558)[1] (Mysore–Bangalore Rajya Rani Express) என்பது மைசூர் மற்றும் பெங்களூர் இடையே தினசரி பயணிக்கும் தொடருந்து ஆகும். இந்த தொடருந்து பெங்களூரிலிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு மைசூரைச் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மைசூரிலிருந்து பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்பட்டு மாலை 5:10 மணிக்குப் பெங்களூரு நகரை வந்தடைகிறது.
இந்த தொடருந்து பெங்களூரிலிருந்து மைசூர் வரை 16558 என்ற எண்ணிலும், மறுதிசையில் 16557 என்ற எண்ணிலும் இயங்குகிறது. பயண வழியில், இந்த தொடருந்து கெங்கேரி, பிடாடி, இராமநகரம், சென்னபட்டணம், மத்தூர், மாண்டியா, பாண்டவபுரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் நிற்கிறது.
இதில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட பெட்டி முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதியுடன் கிடைக்கிறது.
வரலாறு
[தொகு]ராஜ்ய ராணி விரைவுவண்டி, சுற்றுலா, யாத்திரை அல்லது வணிகத்திற்கு முக்கியமான பிற நகரங்களுடன் மாநில தலைநகரங்களை இணைக்க இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் தொடர் விரைவு வண்டியாகும். இந்த தொடருந்துகள் 2011ம் ஆண்டு ரயில்வே நிதியறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rajya Rani Express to Connect State Capitals With Important Cities of Those States". இந்திய அரசு. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 25 February 2011.