மைக் இம்பர்
பிறப்பு | November 1940 |
---|---|
இறப்பு | ஏப்ரல் 28, 2011 (அகவை 70–71) |
தேசியம் | New Zealand |
மைக்கேல் ஜான் "மைக்" இம்பர் (Michael John "Mike" Imber)(நவம்பர் 1940 - 28 ஏப்ரல் 2011) என்பவர் நியூசிலாந்து நாட்டினைச் சார்ந்த பறவையியல் நிபுணர் ஆவார். இவர் குழல் போன்று அலகுடைய கடற்பறவையில் அதிக அளவில் ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளார்.
இம்பர் நியூசிலாந்து இயற்கைப் பாதுகாப்புத் துறையில் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இதில் அவரின் முன்னோடி பணியான வனவிலங்கு பாதுகாப்பில் 21 ஆண்டுகள் அடங்கும்). கடற்பறவை மற்றும் நீர் உயிரியல் ஆய்வாளராகிய இவர் 2006ல் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1] குழல் மூக்குப் கடல்பறவை மற்றும் அல்பட்ரோசு பறவைகளின் உணவான தலைக்காலிகள் குறித்து இவரது ஆரம்பக்கால ஆய்வுகள் அமைந்தது. கடல் பறவைகள் குறித்த தனது ஆய்விற்காக இவர் பல தீவுகளுக்கும், பல்வேறு நாடுகளுக்கு ஆராய்ச்சி தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு பயணம் செய்துள்ளார். நியூசிலாந்தினைச் சுற்றியுள்ள தீவுகளுக்கும், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்டிக்காவின் துணை தீவான பிரின்ஸ் எட்வர்ட் தீவிற்கும், தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கவுத் தீவிற்கும் பயணம் செய்துள்ளார்..[2]
2015இல் இம்பர் சதாம் தீவில் அழிந்து போன குழல்மூக்கு கடற்பறவையினை (டெரோடுரோமா இமெரி) விவரித்தார். இந்த பறவை இவரது நினைவினைப் போற்றும் விதமாகப் பெயரிடப்பட்டது.[3]
வெளியீடுகள்[தொகு]
இம்பர் 50க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ரீடர்ஸ் டைஜிச்டு ஆப் நியூசிலாந்து பறவைகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அண்டார்டிக் பறவைகள் கையேடு, மற்றும் நியூசிலாந்து பறவைகள் பட்டியல் உள்ளிட்ட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- Cooper, John (2011-05-05). "Obituary: Michael John Imber, New Zealand procellariiform seabird researcher". Accord sur la Conservation des Albatros et des Pétrels (ACAP). 2013-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-28 அன்று பார்க்கப்பட்டது.
- "Pterodroma Pelagics". Kiwi Wildlife Tours. 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-28 அன்று பார்க்கப்பட்டது.