மைக்ரோசாப்ட் கல்வித் தேடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் கல்வித் தேடல்
Microsoft Academic Search
வலைத்தள வகைமேற்கோள்கள் தரவுத்தளம்
உரிமையாளர்மைக்ரோசாப்ட்
வணிக நோக்கம்இல்லை
உரலிacademic.research.microsoft.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்


மைக்ரோசாப்ட் கல்வித் தேடல் (Microsoft Academic Search) என்பது ஒரு ஆராய்ச்சித் திட்டமாகும். மேலும் கல்வித் தேடுபொறி 2012 செயல் பாட்டிலிருந்து நீங்கி மீண்டும் 2016-ல் தொடங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

மைக்ரோசாப்ட் 2006-ல் கூகிள் இசுகாலருடன் நேரடியாகப் போட்டியிட விண்டோசு லைவ் கல்வித் தேடல் என்ற தேடல் கருவியை அறிமுகப்படுத்தியது.[1] இது முதல் ஆண்டிற்குப் பிறகு லைவ் கல்வித் தேடல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.[2] 2009ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் ஆசியா ஆராய்ச்சி குழுமம் 2009ஆம் ஆண்டில் லிப்ரா என்ற பீட்டா கருவியை அறிமுகப்படுத்தியது. இது பொருள்-நிலை செங்குத்து தேடல், [3] தரவுச் செயலாக்கம், உட்பொருளை இணைத்தல் மற்றும் தரவு காட்சிப்படுத்தல் ஆகியவற்றில் படிமுறை ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.[4] லிப்ரா 2011-ல் மைக்ரோசாப்ட் கல்வித் தேடல் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது. 27.2 மில்லியன் பதிவுகளைப் புத்தகங்கள், மாநாட்டு ஆவணங்கள் மற்றும் ஆய்விதழ்களிலிருந்து கொண்டிருந்தது.[2]

பெருமளவில் செயல்பட்டாலும், இந்தச் சேவையானது ஒரு தயாரிப்பு இணையதளமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. மேலும் திட்டத்தின் ஆராய்ச்சி இலக்குகளை அடையும் போது முதலில் உத்தேசித்தபடியே சேவையினை நிறுத்தியது.[5] சேவை நிறுத்தப்பட்டு 2012-ல் புதுப்பிக்கப்பட்டது.[6][7] இந்தச் சரிவு முன்னர் அறிவிக்கப்படவில்லை என்பது ஆசிரியர்களுக்குச் சுட்டிக்காட்டியது. இந்த சேவையானது கல்வியாளர்கள் மற்றும் நூலியல் வல்லுநர்களால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. [7]

சூலை 2014-ல், மைக்ரோசாப்ட் அகாடமிக் ஆராய்ச்சித் திட்டத்திலிருந்து தயாரிப்புச் சேவையாக உருவாக்கி வருவதாகவும், மைக்ரோசாப்டின் முதன்மையான தேடுபொறியான பிங் மற்றும் அதன் அறிவார்ந்த தனிப்பட்ட உதவி சேவையான கார்டனாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் ரிசர்ச் அறிவித்தது. "மைக்ரோசாஃப்ட் அகாடமிக் தேடலை ஆராய்ச்சி முயற்சியிலிருந்து உற்பத்தி வரை வளர்ப்பதன் மூலம்," "பிங்-இயங்கும் கோர்டானாவை எங்கள் பயனர்களுக்குச் சிறந்த தனிப்பட்ட ஆராய்ச்சி உதவியாளராக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்" என மைக்ரோசாப்ட் ரிசர்ச்'ஸ் குவான்சன் வாங் கூறினார்.[8]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Carlson, Scott (April 2006). "Challenging Google, Microsoft Unveils a Search Tool for Scholarly Articles". Chronicle of Higher Education 52 (33): A43. https://eric.ed.gov/?id=EJ773667. பார்த்த நாள்: 29 January 2017. 
  2. 2.0 2.1 Jacsó, Péter (2011). "The pros and cons of Microsoft Academic Search from a bibliometric perspective". Online Information Review 35 (6): 983–997. doi:10.1108/14684521111210788. 
  3. "Microsoft Research News: Search Objective Gets a Refined Approach". Microsoft Research. http://research.microsoft.com/en-us/news/features/verticalsearch.aspx. 
  4. "Microsoft Research Projects - Academic Search". Microsoft Research. http://research.microsoft.com/en-us/projects/academic/. 
  5. "About Microsoft Academic Search". Microsoft Research. http://academic.research.microsoft.com/About/Help.htm. 
  6. "Microsoft Academic Search FAQ". https://academic.microsoft.com/FAQ. 
  7. 7.0 7.1 Orduna-Malea, Enrique; Juan Manuel Ayllon; Martin-Martin, Alberto; Emilio Delgado Lopez-Cozar (2014). "Empirical Evidences in Citation-Based Search Engines: Is Microsoft Academic Search dead?". Online Information Review 38 (7): 936. doi:10.1108/OIR-07-2014-0169. 
  8. "Making Cortana the Researcher's Dream Assistant". http://blogs.technet.com/b/inside_microsoft_research/archive/2014/07/14/making-cortana-the-researcher-s-dream-assistant.aspx. 

வெளி இணைப்புகள்[தொகு]