உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரிசாலசு கோதிகேரென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரிசாலசு கோதிகேரென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
மை. கோதிகேரென்சிசு
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு கோதிகேரென்சிசு
(ராவ், 1937)
வேறு பெயர்கள்

பிலேடசு கோதிகேரென்சிசு ராவ், 1937
மைக்ரிசாலசு நாரையென்சிசு (ராவ், 1937)
மைக்ரிசாலசு சுவாமியானசு (ராவ், 1937)

மைக்ரிசாலசு கோதிகேரென்சிசு (Micrixalus kottigeharensis; கோத்திகேகர் நடனத் தவளை அல்லது கோத்திகேகர் டொரண்ட் தவளை என்று அழைக்கப்படுகிறது) என்பது மைக்கிரிசலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் கருநாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.[2] இது "பரிணாம ரீதியாக வேறுபட்ட மற்றும் உலகளவில் ஆபத்தான (EDGE) 100 உயிரினங்களில் ஒன்றாகும்".[3] இதன் சிற்றினப் பெயரானது கருநாடகாவில் சிக்மகளூர்க்கு அருகில் உள்ள கிராமப் பெயரான "கோட்டிகேகாரா" என்பதிலிருந்து தோன்றியது.

வகைப்பாட்டியல்

[தொகு]

2014 வரை, மைக்ரிக்கலசு நரேனென்சிசு மற்றும் மைக்ரிக்கலசு சுவாமியானசு இரண்டும் தனித்தனி சிற்றினங்களாகக் கருதப்பட்டன; ஆனால் பின்னர் இவை தொகுதிப் பிறப்பு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் மை. கோதிகேரென்சிசு இளைய ஒத்த சொல்லாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[4]

விளக்கம்

[தொகு]

ஆண் மைக்ரிக்கலசு கோதிகேரென்சிசு உடல் நீளம் 22-24 மி.மீ ஆகும். பெண் தவளையின் உடல் நீளம் 28-33 ஆகும்.[4]

வாழிடம்

[தொகு]

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் வேகமாக ஓடும் நீரோடைகள் மைக்ரிக்கலசு கோதிகேரென்சிசு தவளையின் விருப்பமான வாழிடமாகும்.[4] இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 S.D. Biju, Robert Inger, Gopalakrishna Bhatta, Raju Vyas, M.S. Ravichandran (2004). "Micrixalus kottigeharensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58380A11763536. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58380A11763536.en. https://www.iucnredlist.org/species/58380/11763536. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Frost, Darrel R. (2016). "Micrixalus kottigeharensis (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
  3. "Kottigehar Bush Frog (Micrixalus kottigeharensis)". EDGE of Existence programme. Zoological Society of London. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
  4. 4.0 4.1 4.2 Biju, S. D.; Sonali Garg; K. V. Gururaja; Yogesh Shouche; Sandeep A. Walujkar (2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Biological Sciences) 43 (1): 37–123. doi:10.4038/cjsbs.v43i1.6850.