மைக்கோபிளாஸ்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mycoplasma
M. haemofelis IP2011.jpg
Mycoplasma haemofelis
உயிரியல் வகைப்பாடு
உலகம்: Bacteria
தொகுதி: Tenericutes
வகுப்பு: Mollicutes
வரிசை: Mycoplasmatales
குடும்பம்: Mycoplasmataceae
பேரினம்: Mycoplasma
Nowak 1929

மைக்கோபிளாஸ்மா (Mycoplasma) என்பது பாக்டீரியாவின் ஒரு பிாிவு ஆகும், அவை அவற்றின் செல் சவ்வுகளைச் சுற்றி ஒரு செல் சுவரைக் கொண்டிருக்காது.[1]  செல் சுவர் இல்லாததால், பென்சிலின் அல்லது பிற பீட்டா-லாக்டாம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற பல பொதுவான ஆன்டிபயாடிக்குகளால் அவை வளா்ச்சியை இழக்கின்றன. அவைகள் ஒட்டுண்ணி அல்லது மட்குண்ணியாக வாழ்கின்றன. பல இனங்கள் மனிதர்களில் நோய்களை உண்டாக்குகின்றன, இதில் எம்.நியூமோனியா மற்றும் எம்.பின்மிலிமியம்,  நிமோனியா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளை உண்டாக்குகின்றன, இது இடுப்பு அழற்சி நோய்களை ஏற்படுத்துவதாக  நம்பப்படுகிறது. மைக்கோப்ளாஸ்மா இனங்கள் இன்று கண்டறியப்பட்ட மிகச்சிறிய பாக்டீரியா  ஆகும்,[2] இவற்றால் ஆக்ஸிஜன் இல்லாமல் வாழ முடியும், மேலும் இது பல்வேறு வடிவங்களில் வாழ கூடியது. உதாரணமாக, M. ஜெனீலிடியம்( குடுவை வடிவம்) (சுமார் 300 x 600 nm)  M. நியூமேனியா (நீளம் 100 x 1000 nm) ஆகும். நூற்றுக்கணக்கான மைக்கோபிளாஸ்மா இனங்கள் விலங்குகள் பாதிக்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ryan KJ, Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ). McGraw Hill. பக். 409–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8385-8529-9. 
  2. Richard L. Sweet; Ronald S. Gibbs (1990). Infectious Diseases of the Female Genital Tract. Lippincott Williams & Wilkins, 2009. https://archive.org/details/infectiousdiseas00swee. 
  3. Larsen, Bryan; Hwang, Joseph (2010). "Mycoplasma, Ureaplasma, and Adverse Pregnancy Outcomes: A Fresh Look". Infectious Diseases in Obstetrics and Gynecology 2010: 1–7. doi:10.1155/2010/521921. பன்னாட்டுத் தர தொடர் எண்:1064-7449. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கோபிளாஸ்மா&oldid=3651106" இருந்து மீள்விக்கப்பட்டது