மைக்கொசெப்பரசு சிமித்தியி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கொசெப்பரசு சிமித்தியி
Mycocepurus smithii plate.png
மைக்கொசெப்பரசு சிமித்தியி
Mycocepurus smithii
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: Hymenoptera
துணைவரிசை: Apocrita
பெருங்குடும்பம்: Vespoidea
குடும்பம்: பார்மிசிடீ
(Formicidae)
சிற்றினம்: Attini
பேரினம்: Mycocepurus
இனம்: M. smithii
இருசொற் பெயரீடு
மைக்கொசெப்பரசு சிமித்தியி
Mycocepurus smithii

(Forel, 1893)
Mycocepurus smithii distribution.svg
Distribution of Mycocepurus smithii

மைக்கொசெப்பரசு சிமித்தியி (Mycocepurus smithii) என்னும் எறும்பினம் ஆண்கள் இல்லாமல் எதிர்ப்பால் உறவுகொள்ளாமலே இனப்பெருக்கம் செய்யும் ஒன்று. இவ்வினம் தென் அமெரிக்காவில் வாழ்கின்றது. இதன் இனப்பெருக்கம் உயிர்ப்படி முறையில் (குளோனிங், cloning) நடைபெறுகின்றது]].[1]. ஒரு எறும்புப் புற்றில் உள்ள எல்லா எறும்புகளும் அரசி எறும்பின் உடலின் படியுருவாகவே (குளோன், clone) இருப்பதாக டிஎன்ஏ ஆய்வின் படி கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எறும்பினம் ஒருவகையான பூஞ்சைக் காளான்களை தம் கூட்டுக்குள் தோட்டம் போல் வளர்க்கின்றது. இவ்வகையாக பூஞ்சைக் காளான்களை வளர்ப்பதால் இவற்றைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். அத்தினி (Attini) என்னும் இலைவெட்டி எறும்புகள் போன்ற பூஞ்சைக் காளான் பயிரிட்டு உடன் வளரும் எறும்பினங்களின் இயற்கை அறிவியல் பற்றி ஆய்வுக்குத் துணை செய்யும் என நினைத்தனர்.[2]

பூஞ்சைக் காளான் வளர்ப்பு[தொகு]

ஒரு குடியிருப்பை உருவாக்கவிருக்கும் அரசி எறும்பு, புற்று அமைக்கத் தோண்டும் முன்னர் குழிக்குள்ளேயோ அல்லது அதன் அருகிலோ அதன் இறக்கைகளைக் களைகின்றது. பின்னர் ஏறத்தாழ 10 செமீ ஆழத்திற்குக் குழிதோண்டி அதனுள் முதன்மையான தனியறை ஒன்றை அமைக்கின்றது. இனப்பெருக்கம் செய்யும் அரசி எறும்பு அதன் இறக்கைகளை இந்த தனி முதன்மை அறைக்கு எடுத்துச்சென்று அவ்வறையின் கூரைப் பகுதியில் சொருகி வைக்கின்றது. இவ் இறக்கையின் பரப்பில் பூஞ்சைக் காளான் சிறு தோட்டம் போல வளர்கின்றது.

கூட்டின் அமைப்பு[தொகு]

மைக்கொசெப்பரசு சிமித்தியி (M. Smithii ) புயெர்ட்டோ ரிக்கொ, கோசுட்டா ரிக்கா, டிரினிடாட் ஆகிய நாடுகளில் கூடுகட்டி வாழ்கின்றன. இக்கூடுகளுக்கு ஒரேயொரு உள்நுழை வாயில்தான் உண்டு, ஆனால் அருகே உள்ள மற்ற குடும்பங்களின் கூடுகளின் நுழைவாயில்கள் இருப்பதால் பல நுழைவாயில்கள் இருப்பது போல தோற்றம் அளிக்கலாம்.[2] M. Smithii nests consist of a mound excavated around an entrance roughly 1.2 mm in diameter.[3] இதனால் காளான் தோட்டம்த்திற்கு செங்குத்தான இடுக்கான பாதையின் திறப்பு ஏறத்தாழ 12.5 மீமீ இருக்கும்[3] மைக்கொசெப்பரசு சிமித்தியி மிக இடுக்கான திறப்பே (1.3 மிமீ) வைத்துள்ளது. இதனால் இரண்டு எறும்புகள் ஒன்றை ஒன்று ஒரே நேரத்தில் தாண்டிச் செல்ல இயலாது. பணிசெய்யும் எறும்பின் தலையின் அளவு 0.7 மிமீ இருக்கும், அரசி எறும்பின் தலை அளவு 0.9 மிமீ இருக்கும்.[2] கூட்டுக்குள் பல பெரிய அறைகளும் உண்டு. அவை 3.6 மிமீ அளவு இருக்கும். இங்கு ஓரெறும்பு மற்றொன்றைத் தாண்டி செல்லமுடியும். அப்பொழுது தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளமுடியும். குறுகிய சிறு பாதைகள் வெப்பநிலை, ஈரப்பதம் இவற்றைக் கட்டுப்படுத்த இருக்கக்கூடும் என நினைக்கின்றனர். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து காப்பாகவும் இருக்கும்.[2]

இம்லர் (Himler) ஆய்வு[தொகு]

இவ்வாய்வு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் டெக்சாசு மாநிலத்தில் ஆசுட்டினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தை சேர்ந்த அன்னா இம்லர் (Anna Himler) என்னும் மேற்பட்டப்படிப்பு மாணவர் முன்னின்று நடத்தியது[1][4] இவ்வாய்வாளர்கள் முதலில் எறும்புகளின் பூஞ்சைக் காளான் தோட்டம் வளர்க்கும் திறம் பற்றி இருந்தது.[4] கூட்டில் உள்ள ஒவ்வொரு எறும்புகளின் டிஎன்ஏக்களையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் அரசி எறும்பின் அமைப்பே கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[4] அது மட்டுமல்லாமல் எறும்புகளின் பெண்ணின் பாலுறுப்பாகிய மசல் உறுப்பு (mussel organ) இவ் எறும்பு இனத்தில் பழுதடைந்து இருப்பதாக அறுவை ஆய்வு செய்து கண்டுபிடித்தனர்[5][6] ஆறு வெவ்வேறு சோதனைகள் செய்த பொழுதும் இவ் எறும்பு இனத்தில் ஆண் எறும்புகள் ஏதும் கண்டுபிடிக்கவில்லை.[1] இவ் ஆய்வுக் குழுவின் ஆய்வுக் கண்டுபிடிப்புகளை புரொசீடிங்சு ஆவ் ராயல் சொசைட்டி பி (Proceedings of the Royal Society B) என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.[6]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Females get along fine without males - in the world of tropical ants". த டெயிலி டெலிகிராப் (2009-04-16). பார்த்த நாள் 2009-04-17.
  2. 2.0 2.1 2.2 2.3 Fernandez-Marin, H.; Zimmerman, J. K.; Wcislo, W. T.; Rehner, S. A. (2005). "Colony foundation, nest architecture and demography of a basal fungus-growing ant, Mycocepurus smithii (Hymenoptera, Formicidae)". Journal of Natural History 39 (20): 1735–1743. doi:10.1080/00222930400027462. http://striweb.si.edu/publications/PDFs/Wcislo_Fernandez%20et%20all%20(2005)(J%20Nat%20Hist).pdf. பார்த்த நாள்: 2009-04-19. 
  3. 3.0 3.1 Fernández-Marín, H; Zimmerman, J.K.; Wcislo, W.T. (2004). "Ecological traits and evolutionary sequence of nest establishment in fungus-growing ants (Hymenoptera, Formicidae, Attini)". Biological Journal of the Linnean Society 81: 39–48. doi:10.1111/j.1095-8312.2004.00268.x. http://si-pddr.si.edu/dspace/bitstream/10088/3672/1/Fernandez_and_Wcislo.pdf. பார்த்த நாள்: 2009-04-20. 
  4. 4.0 4.1 4.2 "Ants inhabit 'world without sex'". BBC News (2009-04-15). பார்த்த நாள் 2009-04-17.
  5. Baer, Boris; Boomsma, Jacobus J. (2006). "Mating Biology of the Leaf-Cutting Ants Atta colombica and A. cephalotes". Journal of Morphology 267: 1165–1171. doi:10.1002/jmor.10467. http://www1.bio.ku.dk/forskning/oe/cse/media/baerboomsma2006_jmorphology.pdf. பார்த்த நாள்: 2009-04-19. 
  6. 6.0 6.1 Himler AG, Caldera EJ, Baer BC, Fernández-Marín H, Mueller UG (2009). "No sex in fungus-farming ants or their crops". Proc R Soc B. doi:10.1098/rspb.2009.0313. Lay summary – BBC News (2009-04-15). 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]