உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கேல் கே. மோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் கே. மாே மில்வாக்கியில் 17 நவம்பா் 1937 ல் பிறந்தாா்.[1]  இவா் ஒரு அமொிக்க ஆய்வு இயற்பியலாளா் . துகள் இயற்பியல், அணுக்கரு இயற்பியலில் புலமை பெற்றவா். 1987 ஆம் ஆண்டில்  82Se  ல்[2][3]  இரண்டு நுண்தொதுமிகளில் இரட்டை பீட்டா சிதைவினை கண்டறிந்ததன் மூலம் இவா் பெயர்பெற்றார்.

கல்வியும் தொழிலும்

[தொகு]

மோ 1959 ல் தனது இளங்கலை பட்டத்தை சுட்டான்போடு பல்கலைகழகத்திலும் 1965 இல் தனது முனைவா் பட்டத்தைக் கேஸ் வெசுட்டன் இரிசா்வ் பல்கலைகழகத்திலும் பெற்றாா்.

முகிலறையில்  மிகை ஆற்றல் உடைய அண்டக் கதிர்களின்  இடைவினை குறித்து இவர் தனது முனைவா் படிப்பிற்குப் பின் கால்டெக்கில்  ஓராண்டு ஆய்வு செய்தாா். 1966 ஆம் ஆண்டு இா்வினிலுள்ள கலிபோா்னியா பல்கலைகழகத்திற்கு சென்றாா். சி. எசு. வூ  அனுப்பிய ஒரு முன்னுரை   இரட்டை பீட்டா சிதைவில் அவரது ஆா்வத்தை துாண்டியது. கால்டெக்கில் அவர் பெற்ற அனுபவத்திலிருந்து ஒரு தாெந்தரவு தரக்கூடிய 214Bi ஐ முகிலறை மூலம் தணிக்கலாம் என்பதை வூ என்பவா் மூலம் உணா்ந்து கொண்டாா். பிசுமத்தை  குறித்த இவரது ஆய்வுகளில் மிகச் சிறிய அளவு விவரங்களே கிடைக்கின்றன. டேவிட் நைகிரினின் புதிய கொள்கையான நேர வீழ்ப்பு அறை உணா்வுத்திறனை மேம்படுத்துவதற்கான  வழிமுறையை  வழங்குகிறது.  மோ இரட்டை பீட்டா சிதைவுக்காக டிபிசியை வடிவமைத்தாா். மேலும் 1987  இல் ஸ்டீவ் இலியாட், ஆலன் கான்  டிபிசியினை மேம்படுத்தி 82Se ல்   இரட்டை நுண்தாெதுமிகளின் சிதைவு குறித்து வலுவான  சான்றுகளை கண்டறிந்தாா்கள். இவா்களின் குழு 48Ca, 100Mo, 150Nd போன்ற தனிமங்களில் அரிய சிதைவுகளைக் கணக்கிட்டனா்.மோ இா்வினிலுள்ள கலிபோா்னியா பல்கலைகழகத்தில் 1966 ல் உதவி ஆய்வு பேராசிாியராகவும் 1968 ல் உதவி பேராசிாியராகவும் 1973 ல் இயற்பியல் ஆய்வாளராகவும் பணிபுாிந்து 1997 இல் ஓய்வு பெற்றாா்.

இவர் மிக அரிதான  நுண்தொதுமியற்ற  இரட்டை பீட்டா சிதைவுக்கானத் தேடலில் ஈடுபட்டார், அதற்காக இவர் 1991 ல் ஒரு முன்மொழிவை வெளியிட்டார்.[4] 2000 ஆம் ஆண்டில் அவர் SLAC இன் செறிவான செனான் ஆய்வகத்தால்  (EXO) வழங்கப்பட்ட நுண்தொதுமியற்ற இரட்டை பீட்டா   சிதைவுக்கான தேடலில் பங்கு பெற்றார்.

2013ல்  மோ அணுக்கரு இயற்பியலுக்காக டாம் போனா் பாிசினைப் பெற்றாா்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. biographical information from American Men and Women of Science, Thomson Gale 2004
  2. Elliott, S. R.; Hahn, A. A.; Moe, M. K. (1987). "Direct evidence for two-neutrino double-beta decay in 82Se". Phys. Rev. Lett. 59: 2220–2223. doi:10.1103/PhysRevLett.59.2020. http://prl.aps.org/abstract/PRL/v59/i18/p2020_1. 
  3. Malcolm Browne (4 September 1987). "Predicted Decay of Element Seen". NY Times. https://www.nytimes.com/1987/09/04/us/predicted-decay-of-element-seen.html. 
  4. Moe, M. K. (1991). "New approach to the detection of neutrinoless double beta decay". Phys. Rev. C 44: R931–R934. doi:10.1103/PhysRevC.44.R931. Bibcode: 1991PhRvC..44..931M. http://prc.aps.org/abstract/PRC/v44/i3/pR931_1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கே._மோ&oldid=3874441" இலிருந்து மீள்விக்கப்பட்டது