மைக்கேல்சன் நட்சத்திர குறுக்கீட்டுமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல்சன் நட்சத்திர குறுக்கீட்டுமானி வரைபடம்
1920ல் 100 அங்குல (250செமீ) கூக்கர் தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்ட 20 அடி (6 மீ) மைக்கேல்சன் நட்சத்திர குறுக்கீட்டுமானியின் படம்

மைக்கேல்சன் நட்சத்திர குறுக்கீட்டுமானி (Michelson stellar interferometer) வானியல் குறுக்கீட்டுமானிகளில் முதன்மையானது. 1890 இல் ஆல்பர்ட். அ. மைக்கேல்சன் இதை வடிவமைத்தார். பின்னர் கிப்போலைட் ஃபீசோ இதில் மாற்றங்கள் செய்தார்.

மவுண்ட் வில்சன் வான் ஆய்வகத்தில் (Mount Wilson Observatory), இது முதலில் வடிவமைக்கப்பட்டது. 100 அங்குலம் (~250 செ.மீ)  சமதளக் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது.  முதன்முதலில் நட்சத்திர விட்டங்களைக் காண உதவியது. மைக்கேல்சன் மற்றும் பீசு இணைந்து 1920 டிசம்பரில் திருவாதிரை நட்சத்திரத்தின் விட்டத்தைக் கண்டறிந்தனர். அதன் விட்டம் 240 மில்லியன் மைல்கள் (~380 மில்லியன் கி.மீ ) என்பதைக் கண்டறிந்தனர். செவ்வாய் கிரக வட்டப்பாதையின் அளவில் இருப்பதையும், சூரியனை விட 300 மடங்கு பெரியது என்பதையும் கண்டறிந்தனர்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Michelson, A. A., and Pease, F. G. (1921). Astrophys. J. 53, 249–259.