மே 10, 2009 ரொறன்ரோ மறியல் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்டினர் மறியல் போராட்டம் என்பது மே 10, 2009 அன்று ரொறன்ரோவின் முக்கிய நெடுஞ்சாலை சந்தியான கார்டினரை மறித்து, கனடிய சட்டத்தை மீறி செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஆகும். ஈழப்போரின் இறுதி கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொலை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்த தமிழர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். சில நூறு தமிழர்களும், சில பத்து பல்லினத்தவரும் நடத்திய இப்போராட்டம் சுமார் 7 மணி நேரம் வரை நீடித்து, போக்குவரத்தை தடுத்தது பல்லாயிரக்கணக்கானா பயணிகளை இடைஞ்சல் செய்தது. கனடிய எதிர்கட்சித் தலைவர் இந்த விடயதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பதாக வாக்குறுதி தந்த பின்பு இச் சாலையை விட்டு தமிழர்கள் விலகினார்கள்.

சட்டத்தை மீறுதல்[தொகு]

ஒரு முக்கிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம் செய்வது சட்டத்தை மீறும் செயலாகும். பயணிகளின் வாகனங்களை மறித்து சூழ்ந்து கொண்டதும் சட்டத்துக்கு புறம்பான செயலாகும். இதில் சில பயணிகள் தமது வாகனங்களை விட்டு விட்டு கால் நடையாக சென்றனர். இப்போராட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

விமர்சனம்[தொகு]

சட்டத்தை மீறுவது உட்பட இப் போராட்டம் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியது.

பொதுமக்கள் மதிப்பை பெறாதல்[தொகு]

இப் போராட்டம் ரொறன்ரோ பொது மக்களை இடருக்கு ஈடுபத்தியதால், இது பொதுமக்கள் தமிழ் மக்களின் பிரச்சினை நோக்கி ஒரு நல்ல நிலையை எடுப்பதற்கு தடையாக இருக்கும் என்ப்படுகிறது.

ஊடகங்களில் விமர்சனம்[தொகு]

பெரும்பான்மை மைய ஊடகங்கள், குறிப்பாக வலது சாரி ஊடகங்கள் இப்போராட்டத்தை மிகவும் விமர்சித்து செய்திகள் வெளியிட்டன. குழ்ந்தைகளை ஈடுபடுத்தியது குறிப்பாக விமர்சிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட இளையோர் போராட்டத்தின் உண்மையான இலக்கை அறியாமல், கைக்கலப்பில் ஈடுபடுவதில் அக்கறை காட்டியதாக விமர்சிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள் என்றும் கேள்வி முன்வைக்கப்பட்டது. புலிகளை சரணடைய செய்யுமாறு போராட்டம் நடத்தினால் பொது மக்கள் படுகொலைகள் தடுக்கப்படலாம் என்றும் பரிந்துரைகளை சிலர் முன்வைத்தனர்.

இவற்றையும் பாக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]