மே தினப் பூங்கா, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மே தினப் பூங்கா (May Day Park, Chennai) என்பது முன்பு நேப்பியர் பூங்கா என்று அழைக்கப்பட்டது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். [1] இந்தப் பூங்காவானது சிந்தாதிரிப் பேட்டையில், துணை மேயர் கபாலமூர்த்தி சாலையில் அமைந்துள்ளது. இது 14.5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாள் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி இப்பூங்காவை பராமரித்து வருகிறது. வருடத்தில் எல்லா நாட்களிலும் இப்பூங்கா திறந்துள்ளது.

வரலாறு[தொகு]

1869ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் சென்னை, மாநகராட்சியானது சிந்தாதிரிப்பேட்டை, மெசர் தொழுவம் அமைந்துள்ள இடத்தில், இப்பூங்காவை அமைக்க முன்மொழிந்தது. [2] இந்தக் கருத்துருவானது சென்னை மாநில அரசுக்கு 1869ம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் அனுப்பப்பட்டது.[2] இதனையடுத்து இந்த இடமானது இப்பூங்காவைக் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் பிரான்சிஸ் நேப்பியர் அல்லது பத்தாவது லார்ட் நேப்பியர் என்பவர் பெயரால் முதலில் இப்பூங்கா நேப்பியர் பூங்கா என்று பெயரிடப்பட்டு, அப்போதைய வேளாண்துறை அமைச்சர் ஏ. பி. ஷெட்டி அவர்களால் 1950 ஆம் ஆண்டு செம்படம்பர் 13 ஆம் நாள் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. உழைப்பாளர் தினத்தன்று இப்பூங்காவில் பொதுக் கூட்டங்களும், உழைப்பாளர் தினக் கொண்டாட்டங்கள் அணிவகுப்புகள் போன்றவை நடைபெறுகிறது. இப்பூங்கா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மட்டைப்பந்து கால்பந்து , கைப்பந்து மற்றும் பூப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ற வசதிகள் இப்பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ளன.

சிம்சன் அன் கோ நிறுவனத்தினரால் இப்பூங்கா தத்தெடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Subburaj, V. (2008). Tourist Guide to Chennai. Sura Books. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7478-040-9. 
  2. 2.0 2.1 Report of the administration of the municipality of Madras for the year 1869. H. Morgan. 1870. பக். 58–59. 
  3. Amirthalingam, M.. "Parks of Chennai". Envis Centre on Conservation of Ecological Heritage and Sacred Sites of India. CPREEC. பார்த்த நாள் 4 Feb 2012.