மே. மு. அக்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மே. மு. அக்பர்
2019இல் மே. மு. அக்பர்.
பிறப்பு1968 (அகவை 55–56)
பரப்பனங்காடி, மலப்புறம், கேரளம், இந்தியா.
தேசியம் இந்தியா
பணிஇசுலாமிய போதக, எழுத்தாளர்.
"நிச் ஆஃப் ட்ரூத்" என்ற இசுலாமிய அமைப்பின் இயக்குநர்
சினேகா சம்வதம் என்ற பத்திரிகையின் ஆசிரியர்
வலைத்தளம்
www.nicheoftruthonline.com

மேலவீட்டில் முகம்மது அக்பர் (Meleveettil Muhammad Akbar) ( மலையாளம் : മേലേവീട്ടില് മുഹമ്മദ് അക്ബര്) ஓர் இசுலாமிய போதகராவார். [1] இவர், கேரளாவின் மலப்புறத்தில் ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது மாண நாட்களில், அக்பர் முஜாஹிதீன் மாணவர் இயக்கத்துடன் தொடர்பிலிருந்தார். இவர் ஒரு சொற்பொழிவாளராக அறியப்பட்டாலும், முஸ்லிம் அறிஞராக இருக்க எந்த கல்விப் பயிற்சியும் இல்லை.[2] கேரளாவை தளமாகக் கொண்ட "நிச் ஆஃப் ட்ரூத்" என்ற இசுலாமிய அமைப்பின்[3] [4] இயக்குநராக இருக்கிறார். மேலும், கொச்சியிலிருந்து வெளியிடப்பட்ட சினேகா சம்வதம் என்ற பத்திரிகையின் ஆசிரியருமாவார்.[5] இசுலாமிய தீர்க்கதரிசி முகம்மது நபியின் வாழ்க்கையைப் பற்றி மலையாளத்தில் முதல் வலைத்தளத்தை "நிச் ஆஃப் ட்ரூத்" உருவாக்கியுள்ளது. கொச்சியிலிருந்து இயங்கும் இந்த அமைப்பின் நோக்கம் இந்தியாவின் பன்மைத்துவ சமுதாயத்தின் முன் இசுலாத்தை ஒரு விரிவான மதமாக முன்வைப்பதாகும்.

இவர், அமைதி அறக்கட்டளையால் நடத்தப்படும் 13 பள்ளிகளின் சங்கிலியான "அமைதி சர்வதேச பள்ளி"யின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அதன் பாடத்திட்டத்தின் மூலம் வகுப்புவாத பிரிவை ஊக்குவிப்பதாக கண்டறியப்பட்டதால் சங்கிலி சர்ச்சைக்குள்ளானது.[6] [7]

2018 ஜனவரியில், கேரள அரசு அமைதிப் பள்ளிகளை மூட உத்தரவிட்டது . மேலும், அக்பரை கைது செய்ய ஒரு அனுமதியும் அளித்தது. கொச்சி காவல்துறையினர் இவரை 25 பிப்ரவரி 2018 அன்று கைது செய்தனர்.[8]

அக்பருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தற்போது அனைத்து அமைதி பள்ளிகளும் சாதாரணமாக செயல்பட்டு வருகின்றன. வகுப்புவாத பிரிவை ஊக்குவிக்கும் எந்தவொரு பொருளும் பள்ளி பாடத்திட்டத்தில் உயர் நீதிமன்றத்தால் கண்டறியப்படவில்லை.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prashanth M. P. (May 21, 2017). "Peace International School: M M Akbar refutes Rashid Abdulla's claims | Kozhikode News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
  2. "A Kerala preacher and the textbook controversy in his chain of schools". The Indian Express (in ஆங்கிலம்). 2018-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  3. "Arab News, 10 September 2003 Wednesday (13 Rajab 1424), Article: Muslims Must Adopt a Positive Approach". Archived from the original on 30 March 2012.
  4. "The Hindu, 28 Jan 2004, Kochi Edition, Call to promote regional history". Archived from the original on 2013-01-25.
  5. "Dubai International Peace Convention, March 2010, Biographies of Speakers". Archived from the original on 20 June 2010.
  6. Aravind, Indulekha (31 July 2016). "Why a section of Kerala's Muslim youth is treading a radical path". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-a-section-of-keralas-muslim-youth-is-treading-a-radical-path/articleshow/53468470.cms. 
  7. Krishna, Srikanth. "Kerala CM orders closure of Peace International School after it was found teaching communal content". International Business Times, India Edition. http://www.ibtimes.co.in/kerala-cm-orders-closure-peace-international-school-after-it-was-found-teaching-communal-content-755702. 
  8. "Head of Kerala's Peace School MM Akbar tries to flee country, nabbed at Hyd airport". The News Minute. February 25, 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
  9. "Peace International chief Akbar gets bail" (in en). The Hindu. 10 March 2018. https://www.thehindu.com/news/national/kerala/peace-international-chief-akbar-gets-bail/article23010748.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மே._மு._அக்பர்&oldid=3591297" இலிருந்து மீள்விக்கப்பட்டது