உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் பவானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல் பவானி (Upper Bhavani) என்பது தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் அருகே அமைந்துள்ள ஏரி. இது நீலகிரி–கேரள எல்லையில் அமைந்துள்ளது. மேல் பவானியில் பவானி ஏரி உள்ளது. இவ்விடத்திலிருந்தே பவானி ஆறு உற்பத்தியாகிறது. மேல் பவானி அணை குந்தா நீர் மின் திட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

இது ஊட்டியில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 210 அடி ஆகும். இங்கு அடர்ந்த காட்டுக்குள் ஆதிவாசி மக்கள் குடி இருக்கிறார்கள். ஊட்டியில் இருந்து மிக குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இங்குள்ள காடுகளில் புலிகள், ஓநாய்கள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், சாம்பார் ராட்சத அணில், நீலகிரி குரங்குகள், சிறுத்தைப்புலிகள் வாழ்கின்றன.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_பவானி&oldid=3613412" இலிருந்து மீள்விக்கப்பட்டது