உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் நூபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல் நுபியா என்பது நுபியாவின் தெற்கு பகுதி ஆகும். இது நைல் நதியின் நீரோட்டத்தில் எதிர் திசையில் அமைந்துள்ளது. நைல் நதி வட திசை நோக்கி பாயும் நதி எனவே, மேட்டு நிலமான தென் பகுதியில் இருந்து பாய்வதால் இந்த பகுதி மேல் நுபியா என அழைக்கப்படுகிறது. மேல் நுபியா பகுதி தெளிவான வரையரையின்றி அமைந்துள்ளது. இது கீழ் நுபியா பகுதியை விட மேட்டு பகுதி ஆகும்.

புவியியல் அணுகுமுறை[தொகு]

நைல் நதிக்கரையில் அமைந்த மேல் நுபியா

புவியியல் ரீதியாக மேல் நுபியா நைல் நதியின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது கரையின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.[1] சில நேரங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நைல் நதி கரையிக்கு உட்பட்ட பகுதி நடு நுபியா என அழைக்கப்படுகிறது மேலும் இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நைல் நதிக் கரையில் இருந்து தெற்கே மேல் நுபியா என ஏற்கப்படுகிறது.[2] அரசியல் ரீதியாக மேல் நுபியா தற்போதய சூடான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதி ஆகும். இது கர்த்தூம் நகருக்கு தெற்கே அமைந்துள்ளது. அதாவது வெள்ளை நைல் நதி மற்றும் நீல நைல் நதி இணையும் இடத்திற்கு தெற்கே உள்ள பகுதி ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Török, László (2008). Between Two Worlds: The Frontier Region Between Ancient Nubia and Egypt 3700 BC - 500 AD. Brill. p. XXI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17197-8.
  2. William Yewdale Adams; Nubia: Corridor to Africa; 1977; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7139-0579-3.
  3. Barbara Ann Kipfer; Upper Nubia in: Encyclopedic Dictionary of Archaeology; 2000; isbn 978-0-306-46158-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_நூபியா&oldid=2757438" இலிருந்து மீள்விக்கப்பட்டது