மேல் உச்சி (வடிவவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதுரப் பட்டைக்கூம்பின் மேல் உச்சியும் அடிப்பக்கமும்

வடிவவியலில் மேல் உச்சி (apex) என்பது ஒரு வடிவவியல் வடிவத்தின் உச்சிகளில் உயரத்தில் அமைந்திருக்கும் உச்சியைக் குறிக்கும். ஒரு வடிவவியல் வடிவின் அடிப்பக்கத்திற்கு நேரெதிராக அதன் மேல் உச்சி இருக்கும். '.

இருசமபக்க முக்கோணம்[தொகு]

இருசமபக்க முக்கோணத்தில் அதன் சமபக்கங்கள் இரண்டும் சந்திக்கும் உச்சிப்புள்ளியானது மேலுச்சியாக அமையும். இந்த மேலுச்சியானது இருசமபக்க முக்கோணத்தின் அசமபக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் இருக்கும்.[1]

பட்டைக்கூம்புகளும் கூம்புகளும்[தொகு]

பட்டைக்கூம்புகளிலும் கூம்புகளிலும் அவற்றின் அடிப்பக்கத்திற்கு எதிராகவும் உயர்முனையிலும் மேலுச்சிகள் அமைகின்றன.[1] ஒரு பட்டைக்கூம்பின் மேலுச்சியானது, அதன் பக்க விளிம்புகள் அனைத்தும் சந்திக்கும் புள்ளியாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Weisstein, Eric W., "Apex", MathWorld.
  2. Harold R. Jacobs (2003). Geometry: Seeing, Doing, Understanding (Third ). நியூயார்க்கு நகரம்: W. H. Freeman and Company. பக். 647,655. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7167-4361-3.