மேல்மருவத்தூர் அற்புதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல்மருவத்தூர் அற்புதங்கள்
இயக்கம்ஜகதீசன்
தயாரிப்புஜா. குருமூர்த்தி
கதைஜகதீசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புராஜேஷ்
நளினி
ராதாரவி
சுலக்சனா
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவுடபிள்யூ.ஆர். சந்திரன்
படத்தொகுப்புஎஸ்.வி. ஜெயபால்
கலையகம்ஏவிஎம்
சாரதா
அருணாச்சலம்
பிரகாஷ்
விநியோகம்ஓம் செல்வி ஆர்ட்ஸ்
வெளியீடு1986
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேல்மருவத்தூர் அற்புதங்கள் (Mel Maruvathoor Arpudhangal) என்பது 1986-ஆம் ஆண்டு வெளியான தமிழ் இந்து பக்தி நாடகத் திரைப்படம் ஆகும். ஜகதீசன் இயக்கிய இப்படத்தை ஜா. குருமூர்த்தி தயாரித்தார். திரைப்படத்தின் கதையை சக்தி தாசன் சி. கணேசன் எழுதி, திரைக்கதையை ஜகதீசன் எழுதினார். கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தில் ராஜேஷ், சுலக்சனா, நளினி, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் தெலுங்கில் ஆதி சக்தி மகிமலு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யபட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இபடத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.

தமிழ்ப் பதிப்பு[தொகு]

பாடல் வரிகளை வாலி எழுதினார்.

எண். பாடல் பாடகர் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "ஒரே தாய் ஒரே குலம்" சீர்காழி கோவிந்தராஜன் வாலி 03:38
2 "ஊர பாடல" மலேசியா வாசுதேவன் 01:09
3 "உன்ன தானே மலையா" கே. ஜே. யேசுதாஸ் 04:06
4 "அம்மா உனது அற்புதங்கள்" வாணி ஜெயராம் 04:33
5 "ஆணையிட்டால் ஆடுகிறேன்" பி.சுசீலா 04:37
6 "என்ன பெத்தவளே" கே. ஜே. யேசுதாஸ் 04:15
7 "வங்க கடலின்" எஸ். பி. சைலஜா 05:15
8 "வான்மயில் போலே" வாணி ஜெயராம் 04:14

தெலுங்குப் பதிப்பு[தொகு]

இந்தப் படம் தெலுங்கில் ஆதி சக்தி மகிமலு என்று பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1] தெலுங்கு பதிப்பின் பாடல்களை ராஜரிசி எழுதினார்.[2]

எண். பாடல் பாடகர் நீளம் (மீ: கள்)
1 "நின்னு நேனு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:12
2 "அம்மா நீடு" வாணி ஜெயராம் 04:39
3 "அனந்திகா" பி. சுசீலா 04:44
4 "கண்ணு பெஞ்சின" ராஜ் சீதாரம் 04:20
5 "புண்ய சாகர" வாணி ஜெயரம் 05:17
6 "ஊரிகாய் பாடவே" ஜி. ஆனந்த் 01:18

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Aadhi Sakthi Mahimalu". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  2. "Aadhi Shakthi Mahimulu". Spotify. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.

வெளி இணைப்புகள்[தொகு]