உள்ளடக்கத்துக்குச் செல்

மேல்நில பப்புவா

ஆள்கூறுகள்: 4°46′S 137°48′E / 4.767°S 137.800°E / -4.767; 137.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல்நில பப்புவா
Highland Papua
Province of Highland Papua
Provinsi Papua Pegunungan
திரிகோரா மலை
திரிகோரா மலை
அலுவல் சின்னம் மேல்நில பப்புவா
சின்னம்
மேல்நில பப்புவா அமைவிடம்
Map
மேல்நில பப்புவா is located in இந்தோனேசியா
மேல்நில பப்புவா
      மேல்நில பப்புவா மாநிலம்

ஆள்கூறுகள்: 4°46′S 137°48′E / 4.767°S 137.800°E / -4.767; 137.800
நாடு இந்தோனேசியா
பகுதி மேற்கு நியூ கினி
மாநிலம்மேல்நில பப்புவா
நிறுவல்25 சூலை 2022
தலைநகரம்வாமெனா[1]
பரப்பளவு
 • மொத்தம்51,213.33 km2 (19,773.58 sq mi)
மக்கள்தொகை
 (31 திசம்பர் 2024)[3][4]
 • மொத்தம்14,70,518
 • அடர்த்தி29/km2 (74/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்[5]டானி, உப்லா, கெத்தெங்பான், லானி, மெக், நிடுகா, நிகாலும், யாலி; ஜாவானியர், மலுக்கு
 • சமயம் (2023)[6]கிறிஸ்தவம் 97.90%
சீர்திருத்தம் 90.29%; கத்தோலிக்கம் 7.61%; இசுலாம் 1.92%; நாட்டுப்புறம் 0.15%; வேறு 0.03%
 • மொழிகள்டானி, எய்போமெக், உப்லா, நடுகா, நுங்கலா, நங்கா, வலாக், யாலி, யெட்பா, பப்புவான் மொழிகள்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
தொலைபேசி+62 969
போக்குவரத்துPG
HDI (2024)Increase 0.544 (2024)[7]
 - வளர்ச்சி[8]New entry 54,43 (2024)
 குறைவு [9]
இணையதளம்papuapegunungan.go.id

மேல்நில பப்புவா மாநிலம் (இந்தோனேசியம்: Provinsi Papua Pegunungan; ஆங்கிலம்: Province of Highland Papua) என்பது நியூ கினி தீவில்; இந்தோனேசியா, மேற்கு நியூ கினியின், தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். மேற்கு நியூ கினி நிலப் பகுதி இந்தோனேசிய நியூ கினி அல்லது இந்தோனேசிய பப்புவா என்றும் அழைக்கப்படுகிறது.[10][11]

பப்புவா மாநிலத்தின் முன்னாள் எட்டு பகுதிகளில் இருந்து சூலை 25, 2022 அன்று இந்த மாநிலம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. மேற்கு நியூ கினியின் மத்திய மலைப்பகுதிகளில் அமைந்துள்ள இந்த மாநிலம், இந்தோனேசியாவில் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே மாநிலமாகும்.[12][13]

இந்த மாநிலம் 51,213.33 கிமீ2 பரப்பளவைக் கொண்டது; மற்றும் 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதன் மக்கள் தொகையின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 1,467,050 ஆக இருந்தது (783,220 ஆண்கள் மற்றும் 683,830 பெண்கள்).[14]

நிலவியல்

[தொகு]

இந்த மாநிலத்தின் கிழக்கில் பப்புவா நியூ கினி; தெற்கில் தெற்கு பப்புவா மாநிலம்; மேற்கு மற்றும் தென்மேற்கில் மத்திய பப்புவா மாநிலம்; வடக்கில் பப்புவா மாநிலம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லையாக உள்ளன.

இந்த மாநிலத்தின் தலைநகரம் ஜெயவிஜயா; மிகப் பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் ஜெயவிஜயா பிராந்தியத்தில் (Jayawijaya Regency) உள்ளது.

ஜெயவிஜயா மலைகள்

[தொகு]

மேல்நில பப்புவா பொதுவாக மேல்நில நியூ கினி (New Guinea Highlands) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாநிலத்தின் நிலப்பகுதி மத்திய பப்புவாவில் இருந்து பப்புவா நியூ கினி வரை பரவியுள்ளது. ஜெயவிஜயா மலைகள் (Jayawijaya Mountains) இந்தோனேசிய எல்லைக்குள் அமைந்துள்ளன. ஜெயவிஜயா மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பல மலைகளைக் கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் உள்ள மலைகளில், 4,760 மீட்டர் உயரமுள்ள புஞ்சாக் திரிகோரா மலை (Puncak Trikora); மற்றும் 4,750 மீட்டர் உயரமுள்ள புஞ்சாக் மண்டலா மலை (Puncak Mandala) ஆகியவை அடங்கும். இந்த உயரமான சிகரங்களுக்கு மத்தியில் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரம் கொண்ட பள்ளத்தாக்குகளும் உள்ளன.

லோரென்ட்சு தேசிய பூங்கா

[தொகு]
குரிமா மாவட்டத்தில் பாலியாம் பள்ளத்தாக்கு

ஜெயவிஜயா மலைத் தொடரில் உள்ள பள்ளத்தாக்குகள், பாரம்பரியக் குடியேற்றம்; மற்றும் வேளாண் நிலங்களுக்கான இடங்களாகச் செயல்படுகின்றன. உள்ளூர் பழங்குடிகளின் பிரதான உணவான சர்க்கரை வள்ளிக்கிழங்கு இங்கு அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. இந்த மாநிலத்தின் சில பகுதிகள் கடுமையான குளிர் நிலையின் விளைவாக உறைபனிக்கு ஆளாகின்றன.

இவ்வாறான காலநிலை நிகழ்வு வேளாண் துறைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் பயிர் செய்வதில் தடைகள் ஏற்படுகின்றன; சில காலக் கட்டங்களில் உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது. இந்த மாநிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்; ஆத்திரேலியாவைப் போலவே உள்ளன. அவற்றில் சொர்க்கப் பறவை மற்றும் எக்கிட்னா ஆகியவை அடங்கும். இந்தப் பகுதியைப் பாதுகாக்க நிறுவப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் லோரென்ட்சு தேசிய பூங்கா ஒன்றாகும். இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காவாக அறியப்படுகிறது.[15]

மேல்நில பப்புவா மாநில பிராந்தியங்கள்

[தொகு]

மேல்நில பப்புவா மாநிலம் 8 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது.

மேல்நில பப்புவா மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகள்[16]
குறியீடு பிராந்தியம் தலைநகரம் பரப்பு
கிமீ2
மக்கள்
மதிப்பீடு
2024
ம.மே.சு (2020)
95.01 ஜெயவிஜயா பிராந்தியம் வாமெனா 2,629.01 281,090 0.580 (மத்திமம்)
95.02 பிந்தாங் பெங்குனோங்கான் பிராந்தியம் ஒக்சிபில் 13,751.92 83,330 0.454 (குறைவு)
95.03 யாகுகிமோ பிராந்தியம் டெக்காய் 16,365.94 372,400 0.494 (குறைவு)
95.04 தோலிகாரா பிராந்தியம் கருபாகா 2,990.01 246,380 0.495 (குறைவு)
95.05 மாம்பராமோ தெங்கா பிராந்தியம் கொபாக்மா 4,101.50 53,630 0.476 (குறைவு)
95.06 யாலிமோ பிராந்தியம் எலிலிம் 3,148.29 108,340 0.483 (குறைவு)
95.07 லானி ஜெயா பிராந்தியம் தியோம் 2,339.78 208,520 0.479 (குறைவு)
95.08 நடுகா பிராந்தியம் கென்யாம் 5,886.89 113,340 0.316 (குறைவு)
மொத்தம் 51,213.33 [17] 858,333 0.483 (குறைவு)

மக்கள்

[தொகு]
கல் எரிக்கும் விழாவில் பப்புவா பழங்குடியினர்

இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் காண முடியாத தனித்துவமான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு மரபுகளை நியூ கினியின் பழங்குடி மக்கள் (Indigenous people of New Guinea) கொண்டுள்ளனர். கடலோர பப்புவா மக்கள், பொதுவாக தங்களின் அன்றாட வாழ்க்கையில் உலகளாவிய நவீன மயத்தை ஏற்றுக் கொள்ள அதிக விருப்பம் காட்டுகின்றனர். இது அவர்களின் அசல் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு மரபுகளைக் குறைக்கிறது.[18]

இதற்கிடையில், உள்நாட்டுப் பகுதிகளில் வசிக்கும் பப்புவா மக்களில் பெரும்பாலோர், இன்னும் தங்கள் அசல் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு மரபுகளை, இயன்ற அலவிற்குப் பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் கடந்த நூற்றாண்டில் அவர்களின் வாழ்க்கை முறை நவீனத்துவம் மற்றும் உலகமயமாக்கலின் ஆக்கிரமிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. [52]

கல் எரிக்கும் பாரம்பரிய முறை

[தொகு]
பாலியம் பள்ளத்தாக்கு பகுதியின் பாரம்பரிய விழாவில் பப்புவா பழங்குடி மக்கள்




மேல்நில பப்புவாவில் சமயம் (2022)

  ரோமன் (7.50%)
  மற்றவர்கள் (0.18%)

ஒவ்வொரு பப்புவா பழங்குடியினரும் பொதுவாக தங்கள் சொந்த பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு பழங்குடி இனத்தவருக்கும் ஒவ்வோரு பாரம்பரிய முறை உள்ளது. இந்தப் பாரம்பரிய முறை ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்குப் பெரிதும் வேறுபடலாம்.

பப்புவா மக்களின் பாரம்பரியங்களில் மிகவும் பிரபலமான ஒன்று கல் எரிக்கும் பாரம்பரிய முறை (இந்தோனேசியம்: Tradisi Bakar Batu; r Barapen) ஆகும். இது பப்புவா மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பப்புவா பழங்குடியினரால் கடைப்பிடிக்கப்படுகிறது.

கல் எரிக்கும் பாரம்பரிய முறை அனைத்துப் பழங்குடி பப்புவா மக்களுக்கு ஒரு முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி, நன்றியுணர்வின் ஒரு வடிவமாகவும், கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இடையே ஒரு ஒன்றுகூடும் இடமாகவும் அமைகிறது. இந்தப் பாரம்பரிய முறை பொதுவாக பிறப்புகள், பாரம்பரிய திருமணங்கள், பழங்குடித் தலைவர்களின் முடிசூட்டு விழா மற்றும் வீரர்கள் ஒன்றுகூடும் போது நடத்தப்படுகிறது.

பகைமைப் பண்பாடு

[தொகு]

உணவு சமைக்கப் பயன்படும் அளவுக்குக் கற்கள் சூடாகும் வரை கற்கள் எரிக்கப் படுவதால், இது கல் எரிக்கும் பாரம்பரிய முறை என்று அழைக்கப்படுகிறது. இறைச்சி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் காய்கறிகள் வாழை இலைகளின் மேல் வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு இடையிலான சண்டைகள்; மற்றும் அண்டை பழங்குடி மக்களுடனான பகைமைப் பண்பாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது.[19] எடுத்துக்காட்டாக, 1966 சூன் 4 அன்று எதிரி குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 125 டானி கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.[20] ]

நியூ கினி

[தொகு]

நியூ கினி என்பது ஒரு தீவு; உலகின் இரண்டாவது பெரிய தீவு.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pembentukan Tiga Provinsi Baru di Papua". setkab.go.id. 20 August 2022. Retrieved 28 June 2024.
  2. Setyaningrum, Puspasari (2022-07-02). "Profil Provinsi Papua Tengah". KOMPAS.com. Retrieved 2022-09-11.
  3. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Tengah Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.94)
  4. "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2024" (Visual). www.dukcapil.kemendagri.go.id. Retrieved 13 February 2025.
  5. Ananta, Aris; Arifin, Evi Nurvidya; Hasbullah, M Sairi; Handayani, Nur Budi; Pramono, Agus (2015). Demography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies. ISBN 978-981-4519-87-8. P. 102.
  6. "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2024" (Visual). www.dukcapil.kemendagri.go.id (in இந்தோனேஷியன்). Retrieved 25 July 2024.
  7. "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
  8. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
  9. "Indeks Pembangunan Manusia (Umur Harapan Hidup Hasil Long Form SP2020), 2023-2024". www.bps.go.id. Badan Pusat Statistik. 15 November 2024. Retrieved 16 November 2024.
  10. "Sudah Tak Ada Masalah dengan Loksi Pembangunan Kantor Gubernur". Cenderawasih Pos. 2023-07-13. Archived from the original on 2023-07-13. Retrieved 2023-07-13.
  11. "Jokowi Teken UU Pembentukan 3 Provinsi Baru Papua". Detik.com. 29-07-2022 இம் மூலத்தில் இருந்து 2022-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220729105129/https://news.detik.com/berita/d-6205617/jokowi-teken-uu-pembentukan-3-provinsi-baru-papua. 
  12. "Sudah Tak Ada Masalah dengan Loksi Pembangunan Kantor Gubernur". Cenderawasih Pos. 2023-07-13. Archived from the original on 2023-07-13. Retrieved 2023-07-13.
  13. "Komnas HAM: Kantor Pemprov Papua Pegunungan Idealnya Dibangun Di Gunung Susu Dan Muliama". Jubi Papua. 2023-10-08. https://jubi.id/polhukam/2023/komnas-ham-kantor-pemprov-papua-pegunungan-idealnya-dibangun-di-gunung-susu-dan-muliama/. 
  14. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Pegunungan Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.95)
  15. "New Guinea & Surrounding Islands bioregion". oneearth.org. One Earth.
  16. Prayoga, Fadel (2022-06-23). "DPR Sahkan 3 RUU DOB Papua Menjadi Undang-undang". KOMPAS.tv. Retrieved 2022-07-03.
  17. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Pegunungan Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.95)
  18. Suyanto, Bagong (2 November 2011). "Jati Diri Papua Halaman all". KOMPAS.com. Kompas Cyber Media. Retrieved 4 March 2021.
  19. "Papua New Guinea massacre of women and children highlights poor policing, gun influx". ABC News. 11 July 2019. https://www.abc.net.au/news/2019-07-10/png-tribal-massacre-poor-policing-weapons-influx-fuel-violence/11297136. 
  20. Diamond, Jared (2012). The World Until Yesterday: What Can We Learn from Traditional Societies?. Viking Press. ISBN 978-0-670-02481-0.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்நில_பப்புவா&oldid=4258828" இலிருந்து மீள்விக்கப்பட்டது