மேலோனைல் குளோரைடு
இனங்காட்டிகள் | |
---|---|
1663-67-8 | |
ChemSpider | 66875 |
EC number | 216-772-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 74269 |
| |
பண்புகள் | |
C3H2Cl2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 140.95 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 58 °C (136 °F; 331 K) 28 மி.மீ.பாதரசம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | Danger |
H226, H314 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலோனைல் குளோரைடு (Malonyl chloride) என்பது CH2(COCl)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். மேலோனிக் அமிலத்தினுடைய அசைல்குளோரைடு வழிப்பெறுதியாகவும் ஓர் எளிய மூன்று கார்பன் ஈரமிலகுளோரைடாகவும் மேலோனைல் குளோரைடு கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாக காணப்படும் இச்சேர்மத்தின் மாதிரிகள் அவற்றில் கலந்துள்ள மாசுக்களால் அடர் நிறத்தைப் பெறுகின்றன. அறை வெப்பநிலையில் சில நாட்களுக்குப் பின்னர் இது சிதைவடைந்து தரங்குறைகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் மேலோனைல் குளோரைடைப் பயன்படுத்துகிறார்கள் [1].
தயாரிப்பும் வினைகளும்
[தொகு]மேலோனிக் அமிலத்துடன் தயோனைல் குளோரைடைச் சேர்த்து மேலோனைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது [2]. இருசெயல் சேர்மமான இதை எண்ணற்ற பல வளையச் சேர்மங்களை ஈரசைலேற்றம் மூலம் உருவாக்க பயன்படுத்துகிறார்கள். அணுக்கருகவராத காரத்தின் முன்னிலையில் மேலோனைல் குளோரைடைச் சூடாக்கும்போது கீட்டின் வழிப்பெறுதியான O=C=C(H)COCl தோன்றுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thomas Ziegler (2001). "Malonyl Chloride". Encyclopedia of Reagents for Organic Synthesis. DOI:10.1002/047084289X.rm016.
- ↑ Chittaranjan Raha (1953). "Di-tert-Butyl Malonate". Organic Syntheses 33: 20. doi:10.15227/orgsyn.033.0020. http://orgsyn.org/demo.aspx?prep=CV4P0261.