மேலுமலைக் கணவாய்
மேலுமலைக் கணவாய் | |
---|---|
![]() மேலுமலைக் கணவாய் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி மாவட்டம் |
மேலுமலைக் கணவாய் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது கிருட்டிணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] இது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் மேலுமலை என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.
இதுவே ஒசூரை கிருட்டிணகிரியுடன் இணைக்கிறது.
இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை 7 செல்வதால் தமிழகத்தின் முதன்மையான வணிக வழித்தடமாக உள்ளது. தமிழகத்திலிருந்து சாலை வழியாக ஒசூர், பெங்களூர் ஆகியவற்றை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன. இக்கணவாய் பகுதி காடுகள் அடர்ந்த பகுதியாக உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஒசூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து : 14 பேர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம்". செய்தி (தினகரன்). http://www.dinakaran.com/News_detail.asp?Nid=221582. பார்த்த நாள்: 10 மார்ச் 2017.